அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல கொடியேற்றம் நாளை

 கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 191ஆவது வருடாந்த திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை 3ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.


கொடியேற்றத்துக்கு முன்னதாக அன்றைய தினம் தமிழ், சிங்கள மொழிகளில் காலை 6 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.


கொடியேற்றத்தை அடுத்து எதிர்வரும் 11ஆம் திகதி வரை தினந்தோறும் மாலை 6 மணிக்கு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவுக்கான நவநாள் வழிபாடுகள் நடைபெறும்.


இதையடுத்து, 12ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு கொழும்பு உயர்மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நற்கருணை பெருவிழா நடைபெறும்.


திருவிழா தினமான 11ஆம் திகதியன்று அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும் 5 மணிக்கு சிங்கள மொழியிலும் 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும். 



இதேவேளை, திருவிழா பாடல் திருப்பலிகள் அன்றைய தினம் காலை 8 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் தலைமையில் தமிழ் மொழியிலும் காலை 10 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகையின் தலைமையில் சிங்கள மொழியிலும், நண்பகல் 2 மணிக்கு கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயர் ஜே.டி. அன்தனி ஆண்டகையின் தலைமையில் ஆங்கில மொழியிலும் ஒப்புக்கொடுக்கப்படும்.


புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணியளவில் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்து, நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் திருவிழா நிறைவுபெறும்.





கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல கொடியேற்றம் நாளை Reviewed by Vijithan on June 02, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.