நானாட்டான் டிலாசால் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம் பெற்ற இரத்ததான முகாம்.
மன் /நானாட்டான் டிலாசால் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெறும், சிறப்பு நிகழ்வுகளின் ஒன்றான இரத்த தான முகாம் நானாட்டான் டி லா சால் கல்லூரி பாடசாலை வளாகத்தில் பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் ஏ.மனோ ரஞ்சிதன் தலைமையில் இன்றைய தினம் சனிக்கிழமை (30) காலை இடம்பெற்றது .
குறித்த ரத்ததான முகாமை டி லா சால் கல்லூரி சமூகம் , இணைந்து பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஆகியோர் இணைந்து சிறப்பு ரத்த தான முகாமை முன்னெடுத்தனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் உதவியுடன் முன் னெடுக்கப்பட்ட குறித்த இரத்ததான முகாமில் பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
இதேவேளை குறித்த கடந்த வாரம் குறித்த நிகழ்வின் ஒரு அங்கமாக சிறப்பு மருத்துவ முகாம் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment