முல்லைத்தீவு மாவட்ட நகர மையத்தில் பால்ப்பொருள் உள்ளூர் உற்பத்தி ' முல்கோ' விற்பனை நிலையம் திறந்துவைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் நகர மைய சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் இம்முறை பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் பால்ப்பொருள் உள்ளூர் உற்பத்தி ' முல்கோ' விற்பனை நிலையம்
இன்றைய தினம்(29) காலை 8.30 மணிக்கு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க மற்றும் வடக்குமாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த ' முல்கோ' விற்பனை நிலையமானது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டிலும் நடைபெற்ற குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கெளரவ. திலகநாதன், கௌரவ ஜெகதீஸ்வரன், கெளரவ.து.ரவிகரன் , மேலதிக அரசாங்க அதிபர் திரு .எஸ்.குணபாலன் (நிர்வாகம்), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம கணக்காளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் , கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment