அண்மைய செய்திகள்

recent
-

காங்கேசன்துறை - நாகபட்டினம் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்

 யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் , இந்தியாவின் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.


இந்த கப்பல் சேவையானது அசாதாரண காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இதன் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



அத்துடன் வழமைபோல் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் கப்பல் சேவையில் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.


www.sailsubham.com என்ற இணைத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாகவோ அல்லது 0212224647, 0117642117 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்வதன் மூலமாகவோ பயணச்சீட்டுகளை பதிவு செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







காங்கேசன்துறை - நாகபட்டினம் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம் Reviewed by Vijithan on March 02, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.