வெப்பநிலை குறித்து எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை இடர் முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (06) மாலை 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளை (07) தினத்திற்கு செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் நிலவும் வெப்பச்சுட்டெண், மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவு 'அவதானம்' செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
வெப்பநிலை குறித்து எச்சரிக்கை
Reviewed by Vijithan
on
April 06, 2026
Rating:
Reviewed by Vijithan
on
April 06, 2026
Rating:


No comments:
Post a Comment