மகனுக்கு சொக்லேட் பிஸ்கட்டுக்குள் ஐஸ் போதைபொருள் ; சிறைக்குள் தாயும் மகளும் செய்த பெரும் சம்பவம்
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு, சொக்லேட் பிஸ்கட் பக்கட்டுகளுக்குள் மறைத்து 'ஐஸ்' மற்றும் 'ஹெரோயின்' கொண்டு செல்ல முயன்ற தாயும் மகளும் கையும் மெய்யுமாகப் பிடிபட்டுள்ளனர்.
பிஸ்கட் பக்கட்டுகளுக்குள் இருந்த கிரீம் பகுதியை அகற்றிவிட்டு, அதற்குள் மிகவும் நுணுக்கமான முறையில் போதைப்பொருட்களை நிரப்பி அவர்கள் கொண்டு வந்துள்ளனர்.
விசேட சோதனை
சிறையில் உள்ள தனது மகனைப் பார்ப்பதற்காக வந்தபோது, சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்த விசேட சோதனையில் இந்த போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
சோதனையின் போது பிஸ்கட்டுக்குள் இருந்து 'ஐஸ்' மற்றும் 'ஹெரோயின்' மீட்கப்பட்டதை அடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய தாயும் மகளும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த போதைப்பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டன மற்றும் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாதுகாப்பு மிகுந்த சிறைச்சாலைக்குள் இவ்வளவு சூட்சுமமாக போதைப்பொருளைக் கொண்டு செல்ல முயன்ற சம்பவம் அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Reviewed by Vijithan
on
May 01, 2026
Rating:


No comments:
Post a Comment