மன்னார் நகரத்திற்கு உட்பட்ட குப்பை சேகரிக்கும் பகுதியில் பாரிய தீ விபத்து
மன்னார் நகர சபைக்கு சொந்தமான சின்னக்கடை கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள குப்பை சேகரிக்கும் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தற்பொழுது பெரிய அளவிலே பரவி உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்துவதற்காக நகர சபையின் தீயணைப்பு படைப்பிரிவும் அதேபோன்று 56 படைபிரிவினரும் தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள் மற்றும் கடற்படையினுடைய உதவியும் நாடப்பட்டிருக்கிறது. அதேபோன்று வவுனியா மாநகரசபைக்கு சொந்தமான தீயணைப்பு வண்டியும் வருகை தந்து கொண்டிருக்கின்றது. தற்பொழுது அந்த இடத்திலே அனைத்து முகாமைத்துவ பிரிவு , பிரதேச செயலாளர் , நகரசபை தவிசாளர் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் , முப்படையினர் மற்றும் போலீசார் வருகைதந்து தீயை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருக்கின்றார்கள். தற்பொழுது எல்நினோ காலநில காரணமாக அதிகளவு வெப்பநிலை காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறும் எந்த வகையிலும் தீயை ஏற்படுத்துவதற்குரிய செயற்பாடுகளிலே மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் நாங்கள் அன்பாக கேட்டுக்கொள்கிறோம்
Reviewed by Vijithan
on
August 22, 2026
Rating:


No comments:
Post a Comment