அண்மைய செய்திகள்

recent
-

நீதிக்கான நீள்பயணம் அனைவரும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

 அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆவணி 30 ம் திகதி நீதிக்கான நீள்பயணம்   எனும் தொனிப்பொருளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை கோரும் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாடு

வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெறவுள்ளது 


இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் ,முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க செயலாளர் திருமதி  றஞ்சினிதேவி சசிக்குமார், 

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க உபசெயலாளர்பொன்னையா ஆனந்தகுமார்  மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தி குறித்த மாநாட்டுக்கு  ஆதரவு வழங்குமாறு  

கோரிக்கை விடுத்தனர் 


முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க செயலாளர் திருமதி  றஞ்சினிதேவி சசிக்குமார் அவர்கள்


2009-ஆம் ஆண்டு கொடூர யுத்தத்திற்குப் பிறகு, வட்டுவாகல் பகுதி உட்பட பல்வேறு இடங்களில் தங்களது கணவன்மார்கள், சகோதரர்கள் மற்றும் பிள்ளைகளை உறவினர்கள் நேரடியாக இராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளைத் தேடி, தாய்மார்களும் சகோதரிகளும் வெயில், மழை பொருட்படுத்தாது தொடர்ச்சியாகத் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

இலங்கை அரசாங்கம் வழங்கும் மரணச் சான்றிதழையோ அல்லது நஷ்டஈட்டையோ நாங்கள் கேட்கவில்லை. உறவுகளை நேரடியாகக் கையளித்ததால், உள்நாட்டு அரசாங்கங்கள் மீது எந்த நம்பிக்கையும் இன்றி சர்வதேச நீதியையே நாடி நிற்கிறோம்.


நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 500-க்கும் மேற்பட்ட தாய் தந்தையர் இதுவரை நீதியின்றி உயிரிழந்துள்ளனர்


இவ்வாறான பின்னணியில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30-ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ளது




இங்கு போராட்ட களத்தில் உயிரிழந்த தாய் தந்தையரின் நினைவாகப் புத்தக வெளியீடு


இதுவரை இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் அடங்கிய தொகுப்பு நூல் வெளியீடு


காணாமல் ஆக்கப்பட்டோர் ஒப்படைக்கப்பட்ட போது அவர்களிடம் இருந்த ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களின் சிறப்புப் புகைப்படக் கண்காட்சி. என்பன இடம்பெறவுள்ளது 


குறித்த நிகழ்வில் தமிழ் தேசியப் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகச் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இம்மாநாட்டில் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சர்வதேச நீதியைப் பெற்றுத்தர ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்






நீதிக்கான நீள்பயணம் அனைவரும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை Reviewed by Vijithan on August 22, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.