பரீட்சை பெறுபேறு - பிள்ளைகளை துன்புறுத்தினால் சட்ட நடவடிக்கை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகளைத் தண்டிப்பது அல்லது மனரீதியாகத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறு அந்த அறிக்கை ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகள் அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்புரைகளை மேற்கொள்வதையும் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கூறியவாறு செயற்படுவது சிறுவர் துன்புறுத்தலின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை பெறுபேறு - பிள்ளைகளை துன்புறுத்தினால் சட்ட நடவடிக்கை
Reviewed by Vijithan
on
September 02, 2026
Rating:
Reviewed by Vijithan
on
September 02, 2026
Rating:


No comments:
Post a Comment