உலக பல்கலைக்கழக தரவரிசையில் இலங்கையில் முதலிடம் பிடித்த பேராதனைப் பல்கலைக்கழகம்
2026ஆம் ஆண்டுக்கான UI GreenMetric உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் பேராதனைப் பல்கலைக்கழகம் இலங்கையின் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
“நிர்வாகம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் நிலையான வளாகங்களை மேம்படுத்துதல்” என்ற கருப்பொருளின் கீழ் வெளியிடப்பட்ட இந்தத் தரவரிசையில், 110 நாடுகளைச் சேர்ந்த 2,016 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் பேராதனைப் பல்கலைக்கழகம் 8,262.5 புள்ளிகளைப் பெற்று உலகளவில் 200ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான வளாகத்தைப் பராமரித்தல், நிலையான அபிவிருத்தி முயற்சிகளை முன்னெடுத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பான நடைமுறைகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட அம்சங்களில் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தரவரிசையில் பிரதிபலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான தரவரிசையில் களனிப் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
UI GreenMetric தரவரிசை, பல்கலைக்கழகங்களின் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாடுகள் தொடர்பான பல்வேறு முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் மதிப்பீடு செய்து வருகிறது.
Reviewed by Vijithan
on
September 26, 2026
Rating:


No comments:
Post a Comment