அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரசபை பொது நூலகம் ஏற்பாடு செய்த நூலகக் கண்காட்சி ஆரம்பம்.

 >மன்னார் நகரசபை பொது நூலகம் ஏற்பாடு செய்த வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன் எனும் தொனிப்பொருளில் நூலகக் கண்காட்சி இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.


இன்றைய தினம் புதன்கிழமை (21) காலை ஆரம்பமான குறித்த கண்காட்சி நாளை வியாழன்(22) மாலை 3 மணி வரை இடம் பெற உள்ளது.


முதல் நாளான இன்று புதன் கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பாடசாலை மாணவர் களுக்காகவும்,நாளைய தினம் வியாழக்கிழமை (22) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொது மக்களுக்காகவும் குறித்த நூலக கண்காட்சி இடம் பெற உள்ளது.


இன்றைய தினம் புதன் கிழமை இடம் பெற்று வரும் நூலக  கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள் சென்று கண்காட்சியை பார்வையிட்டதோடு தமக்கு தேவையான நூல்களை தேடி பெற்று பயன் பெற்றுள்ளனர்.


குறிப்பாக பாடசாலை மாணவர்களின் புதிய பாடத்திட்டங்களுக்கு அமைவான புத்தகங்கள் குறித்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள மையினால் மாணவர்கள் அதை பெற்று பயனடைந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.















மன்னார் நகரசபை பொது நூலகம் ஏற்பாடு செய்த நூலகக் கண்காட்சி ஆரம்பம். Reviewed by Vijithan on October 21, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.