அண்மைய செய்திகள்

recent
-

10 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னாரில் மீண்டும் உருவாக்கம் பெறும் NISCO!

 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னாரில் மீண்டும் உருவாக்கம் பெறும் NISCO!


மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாகச் செயலிழந்த நிலையில் காணப்பட்ட NISCO அமைப்பு, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் உருவாக்கம் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இதன் ஒரு கட்டமாக, நேற்று (21) மன்னார் மாவட்டத்தில் NISCO அமைப்பின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது.


இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், மேலதிகக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல், கடனுதவித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு NISCO அமைப்பு செயற்பட்டு வருகின்றது.


எனினும், மன்னார் மாவட்டத்தில் கடந்த சுமார் 10 ஆண்டுகளாக இவ்வமைப்பு இயங்காத நிலை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் அமைப்பைச் செயற்படுத்தும் நோக்கில் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்டப் பணிப்பாளர், பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர், NISCO பிரிவு உத்தியோகத்தர், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், இளைஞர் யுவதிகளும் கலந்துகொண்டனர்.


நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் மன்னாரில் மீண்டும் உருவாக்கம் பெறும் NISCO அமைப்பின் ஊடாக, மாவட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள், கல்வி முன்னேற்றம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மன்னார் மாவட்ட இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கில் NISCO அமைப்பின் மீள்செயற்பாடு முக்கியத்துவம் பெறுகின்றது.





10 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னாரில் மீண்டும் உருவாக்கம் பெறும் NISCO! Reviewed by Vijithan on October 22, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.