முல்லைத்தீவில் மரணத்திலும் வாழ்வு கொடுத்த தாய்..
முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து மூளைச்சாவடைந்த தாய் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த உறுப்பு தானத்தின் மூலம், இரண்டு நோயாளிகளுக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - உடுப்புக்குளம் நான்காம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சண்முகம் இந்திரா என்ற தாய், கடந்த பதினைந்தாம் திகதி தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் மாஞ்சோலைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்து விபத்துக்குள்ளானார்.
குறித்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்த அவர், உடனடியாக அருகில் இருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக தீவிர சிகிச்சைக்காக உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு வழங்கப்பட்ட தீவிர சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், அவர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், குடும்பத்தினரின் சம்மதத்துடன், அவரது இரண்டு சிறுநீரகங்களும் வவுனியா வைத்தியசாலையில் வைத்து தானமாக வழங்கப்பட்டன.
Reviewed by Vijithan
on
October 21, 2026
Rating:


No comments:
Post a Comment