வரலாற்று சாதனை படைத்துள்ள மன் சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவன்
செயின்ட் சேவியர் ஆண்கள் கல்லூரியின் 156 ஆண்டுகால வரலாற்றில், மெய்வல்லுநர் போட்டியில் தேசிய மட்டத்தில் முதல் பதக்கத்தைப் பெற்று மாணவன் புதிய சாதனை படைத்துள்ளார்.
அகில இலங்கைப் பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டி 2026 இல், 16 வயதுக்குட்பட்ட உயரம் பாய்தல் போட்டியில் 1.83 மீற்றர் உயரத்தைத் தாண்டி மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
மேலும், இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுநர் போட்டியில், 13 வயதுக்குட்பட்ட பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்சாதனை மாணவனுக்கும், பாடசாலைக்கும், மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சாதனையாகும்.
Reviewed by Vijithan
on
October 18, 2026
Rating:
.jpg)

No comments:
Post a Comment