மன்னார் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பியவர்களின் கார் விபத்து
மாங்குளம் - ஒட்டுசுட்டான் வீதியின் 15ஆம் கட்டைப்பகுதியில் கார் ஒன்று பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியிலிருந்து மன்னார் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை நிறைவு செய்துகொண்டு, இன்று (03) அதிகாலை மீண்டும் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
அவர்கள் பயணித்த கார் மாங்குளம் - ஒட்டுசுட்டான் வீதியின் 15ஆம் கிலோமீற்றர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த பாலத்தில் பலமாக மோதியுள்ளது. விபத்தில் காயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே இவ்விபத்துக்கு முதன்மைக்காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
November 03, 2026
Rating:


No comments:
Post a Comment