2027 இல் பாடசாலை நேரங்களில் மாற்றம்; கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை! மாணவர்கள் மகிழ்ச்சி
2027 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளுக்கான நேர அட்டவணைகளில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பாகக் கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், இவ்வாண்டின் ஆரம்பத்தில் முதலாம் தரத்துக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக, 2027ஆம் ஆண்டுக்கான 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள்
இதற்கமைய, புதிய பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு முன்னேற்றப்படவுள்ளதுடன், 5ஆம் தரத்துக்கான புதிய பாடத்திட்டம் 2030ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலும், க.பொ.த. சாதாரண தரத்துக்கான புதிய பாடத்திட்டம் 2030ஆம் ஆண்டிலும், க.பொ.த. உயர்தரத்துக்கான கல்விச் சீர்திருத்தங்கள் 2033ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை, 2027ஆம் ஆண்டு முதல் முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் முற்பகல் 11.45 மணி வரை மாற்றியமைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், மூன்றாம் மற்றும் நான்காம் தர மாணவர்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், ஐந்தாம் ஆண்டு முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
November 05, 2026
Rating:


No comments:
Post a Comment