கொழும்பில் கொட்டித்தீர்த்த பேய்மழை; அரசாங்கத்தை விமர்சித்த யூடியூப்பர்
கொழும்பு நகரில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக நகரின் பிரதான வீதிகள் நீரில் மூழ்கிய காணொளிகள் வெளியாகி இருந்தன .
இந் நிலையில் யூடியூப்பர் ஒருவர் , வெள்ளத்தில் பயணிக்கும் மெட்ரோ பேருந்தின் காணொளியைப் பகிர்ந்து கொழும்பு மாநகரசபை வடிகால்களை சரியாகப் பராமரிக்கவில்லை என்று அனுர அரசாங்க்கத்தை கடுமையாக விமர்சித்தார்.
பொதுமக்கள் விசனம்
அதேசமயம் யூடியூப்பர் இயற்கை பேரிடர் காலத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயல்வதாகப் பலர் குற்றம் சாட்டினர்.
அதேவேளை கொழும்பில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த மிக அதிகப்படியான மழை (2 மணி நேரத்தில் 129 மி.மீ) மற்றும் பொதுமக்கள் வடிகால்களில் குப்பைகளைக் கொட்டுவதுமே வெள்ளத்திற்குக் காரணம் எனவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் கொழும்பு வெள்ளத்தில் மூழ்கியதை நினைவூட்டி, தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் செயல்படுவதாகச் சமூக ஊடகப் பயனர்கள் யூடியூப்பரை விமர்சித்தனர்.
நேற்றிரவு திடீரென கொழும்பில் பெய்த பேய்மழையால் மக்கள் பெரும் சிரமங்க்களை எதிர்கொண்டிருந்தனர் எனினும், இன்று காலை நிலைமை சீருக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
November 07, 2026
Rating:


No comments:
Post a Comment