அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 468 ஆண்டுகள் பழமையான குருசுக்கோயில்

புனித பிரான்சிஸ்கு சவேரியார் சீடரின் மன்னார் வருகை நினைவு கூறப்பட்டது 30.11.2012; அன்று ஆகும்.

 இற்றைக்கு 468 வருடங்களுக்கு முன் மன்னார் வாசிகளின் வேண்டுகோளிற்கிணங்க மன்னாருக்கு தோணி முலம் வருகை தந்த புனித பிரான்சிஸ்கு சவேரியாரின் நம்பிக்கைக்குரிய சீடரான ‘சவேரியார் குரு’ மன்னாருக்கு வருகை தந்தார்.


 பட்டிம் கிராமத்திற்கு செல்வதற்காக வடதிசையில் தற்போது அவரின் பெயரை கொண்டு இயங்கும் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் பின்புறமாக அமைந்துள்ள கடல் ஏரியைக் கடப்பதற்கு முனைந்த போது அவரின் கழுத்திலிருந்த குருசு கடலில் விழுந்தது.

 அவர் பல முயற்சிகள் எடுத்தும் அச்சிலுவையை கண்டுபிடிக்க முடியவில்லை. சில வாரங்களின் பின் கடல் நண்டுகளின் கால்களில் சிக்கிய நிலையில் அச்சிலுவை கடல் ஓரத்தில் இருக்கக்கண்டு அதை மீண்டும் எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி கழுத்தில் அணிந்து கொண்டார். அதன் நினைவாக அக்காலத்து வேத சாட்சிகளான மன்னார் கிறிஸ்தவர்களால் அவ்விடத்தில் காட்டு மரங்களினால் அமைக்கப்பட்ட குருசு ஒன்று நடப்பட்டது. அவ்விடத்தை கிறிஸ்தவர்கள் “மன்னார் குருசுக் கோயில் என்று அழைத்தனர்.

 பனை தென்னை மரங்களினால் கட்டப்பட்ட சிறிய கோயிலில் மக்கள் குறிப்பாக குருசு நட்ட இடத்தில் பிராத்தனை செய்து தமது வலைகளை வீசிய போது இறால், நண்டு ,திருக்கை ,பாலை ,உட்பட மீன்பாடு அதிகம் நடந்ததாக நம் முன்னோர்கள் மூலம் அறிய முடிகிறது. 1980-1998 களில் இலங்கையில் கலவரம் ஆரம்பித்து மக்கள் மன்னாரிலிருந்து இந்தியாவுக்கு சென்ற போது இச் சிறிய கோயில் கைவிடப்பட்டது.

 பின்னர் 2011 களில் சுற்றியுள்ள அயல் கிராமங்களில் உள்ள மக்கள் தனிமையில் ஒன்றுகூடி வழிபாடுகளை செய்தனர். இக்கோயிலை கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப வேலைகள் 1.1.2011ம் திகதி பங்குத்தந்தை அருட் திரு. யேசுராஜா அடிகளாரால் தொடக்கப்பட்டு30.11.2012ம் திகதி முடிவுக்கு வந்தது. இவ் ஆலயமானது சம்பிரதாய பூர்வமாக ஆசீர் வதிக்கப்பட்டு அதிமேதகு வண. இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டதுடன் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. இதில் வேத சாட்சியின் மைந்தர்களான மன்னார் தோட்ட வெளி ,பள்ளிமுனை மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

 வரலாற்றுப்பழமை வாய்ந்த இக்கோயிலில் 6’ உயரமான கர்த்தர் சிலை ஒன்று நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் நிறுவப்பட்டுள்ளது.. இது பரப்புக்கடந்தான் கத்தர் திருச்சுருவத்தை எமக்கு நினைவட்டுவதாக உள்ளது. அமைதியான இடத்தில் கடல் ஏரி சூழ்ந்துள்ள இக் கோயில் பக்கர்களுக்கு ஓரு தியான மண்டபம் போல விளங்குகிறது. “ சுமை சுமந்திருப்போரே எல்லோரும் என்னிடம் வாருங்கள்”; என்பது போல மனஅமைதி கிடைக்கப்பெறும் ஒரு தலமாக இது காணப்படுகின்றது.
மன்னாரில் 468 ஆண்டுகள் பழமையான குருசுக்கோயில் Reviewed by NEWMANNAR on December 09, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.