நான் ஒரு முஸ்லிமைக்கூட மீள்குடியேற்றவில்லை: அமைச்சர் ரிஷாத்
வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் இன,மத,மொழி வேறுபாடின்றி சகல மக்களுக்கும் சேவை செய்துள்ளேன். நான் மீள்குடியேற்ற அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் ஒரு முஸ்லிமைக்கூட மீள்குடியேற்றவில்லை.வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் எந்தவொரு தமிழ் தலைமைகளும் இதுவரையில் எம்மோடு பேசவில்லை என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(08-12-2012) அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. அச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தபோது யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் எஞ்சிய காலத்தில், வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதை விட இறுதிக்கட்ட யுத்தத்தால் இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்த மக்களை மீள்குடியேற்ற வேண்டிய பாரிய பொறுப்பிருந்தது.
எனவே அம்மக்களை மீள்குடியேற்றுவதிலேயே எனது முழுக்கவனமும் இருந்தது. அவ்வாறே அப்பதவியிலிருந்து விலகும் போது 70% தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றினேன். இன்று நான் மீள்குடியேற்ற அமைச்சராக இல்லாதபோதும் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற வேண்டிய கடப்பாடு எனக்குள்ளது.
அறுபதாயிரம் குடும்பங்கள் மீள்குடியேறுவதற்கு பதிவு செய்துள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவதாயின் அப்பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுதல் வேண்டும். அப்பிரதேச அபிவிருத்தியை சிலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். முஸ்லிம் பிரதேசங்களுக்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கருதுகின்றனர்.
தமிழ்,முஸ்லிம் மக்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். தமிழ் அரசியல் தலைமைகளும் இதனை கருத்திற்கொள்ள வேண்டும்.அப்போதுதான் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சாத்தியப்படும் எனவும் தெரவித்தார்..

Reviewed by NEWMANNAR
on
December 09, 2012
Rating:

2 comments:
hm
allah romba arinthavan
Post a Comment