இலங்கை செஞ்சிலுவைச் சங்க மன்னார் கிளையினால் மடுத் திருத்தலத்தில் பாரிய முதலுதவிச் சேவை (Photo)
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் கடந்த 11ம் திகதி முதல் 16ம் திகதி வரையில் மடு பகுதியில் குறிப்பாக குஞ்சிக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பகுதிகளில் முதலுதவியில் பயிற்றுவிக்கப்பட்ட சங்கத்தின் தொண்டர்களைக் கொண்டு முதலுதவிச் சேவையானது நாட்டின் பலபாகங்களிலும் இருந்து வருகை தந்திருந்த மருதமடுமாதாவின் பக்தர்களுக்கு முன்னெடுக்கப்பட்டது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை பக்தர்களின் எண்ணிக்கையானது அதியமாக இருந்தமையை அவதாணிக்கக்கூடியிருந்தது.
இந்த பணிகளை மேற்பாரவை செய்யவும் தொண்டர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்குவதற்காகவும் சங்கத்தின் உறுப்பினர்கள், அலுவலகர்கள் மற்றும் சங்கத்தின் பயிற்றுவிப்பாளரும் ஒருங்கமைப்பாளருமான திருவாளர் பாலசிங்கம் மிதுனன் தினமும் சேவை மையப்பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எமது இந்த மனிதாபிமான சேவையினால் 580 போர் முதலுதவியினைப் பெற்று பயனடைந்திருந்தனர். இதன் நிமிர்த்தம் எமது பயிற்றுவிக்கப்பட்ட முதலுதவித் தொண்டர்கள் ஒன்பது பேர் இரவு பகலாக தமது அர்பணிப்பு மிகுந்த சேவையினை வழங்கியிருந்தனர். மேலும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உதவி திட்ட அலுவலகர் செல்வி றோகினி தேவர் மற்றும் இந்த சேவையினை பெற்றுத்தருவதற்கான நிதியனுசரனை நல்கிய கனேடிய செஞ்சிலுவைச் சங்கத்தின் சுகாதார திட்டங்களின் தலைமையதிகாரி டாக்டர் திரு எஸ். என் ஜயசுந்தர ஆகியோர் மடுவிற்கு வருகை தந்திருந்தனர்.
இதன் போது சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் அலுவலகர்களை சங்தித்து எதிர்வரும் காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தின் முதலுதவி பயிற்சிகள் மற்றும் சேவைகளின் முன்னெடுப்பு பற்றிய விடயங்களும் ஆராயப்பட்மை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்க மன்னார் கிளையினால் மடுத் திருத்தலத்தில் பாரிய முதலுதவிச் சேவை (Photo)
Reviewed by NEWMANNAR
on
August 21, 2013
Rating:
No comments:
Post a Comment