மன்னார் மாவட்ட சிகையலங்கார தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினருக்கும் வேட்பாளர் அன்ரன் கமலுக்கும் இடையில் விசேட சந்திப்பு.
மன்னார் மாவட்ட சிகையலங்கார தொழிலாளர் கூட்டுறவு சங்க நிர்வாக உறுப்பினர்களுக்கும்,தேசிய ஜனநாயக முன்னணி கட்சியில் மன்னாரில் இருந்து போட்டியிடும் வேட்பாளர் அ.அன்ரன் கமலுக்கும் இடையில் நேற்று (27) விசேட சந்திப்பு இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட சிகையலங்கார தொழிலாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் உறவுகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
இதன் போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக முன்னணி கட்சியின் வேட்பாளர் அ.அன்ரன் கமல் அவர்ளை பாராளுமன்ற தேர்தலில் ஒட்டு மொத்தமாக முழுமையாக ஆதரித்து பாராளுமன்றம் செல்ல அனைவரும் முன் நின்று செயல்பட ஆலோசனை முன் வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட சிகையலங்கார தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினருக்கும் வேட்பாளர் அன்ரன் கமலுக்கும் இடையில் விசேட சந்திப்பு.
Reviewed by Author
on
October 28, 2024
Rating:

No comments:
Post a Comment