அண்மைய செய்திகள்

recent
-

சுவிற்சர்லாந்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா "சிதறல்கள் 100” (இரண்டாம் பதிப்பு)

சுவிற்சர்லாந்து நாட்டு பேர்ன் மாநகரின்  தமிழர் களறி மண்டபத்தில் கடந்த 27.10.2024 அன்று
ஈழத்து எழுத்தாளர் யாழ்.உரும்பையூர் 
து.திலக்(கிரி) அவர்கள் எழுதிய "சிதறல்கள் - 100” (இரண்டாம் பதிப்பு) கவிதை நூல் தமிழர் களிறி ஆவணக்காப்பகத்தால் வெளியீடு செய்யப்பட்டது.  இந்நிகழ்வானது இலக்கிய ஆர்வலர் திருமதி எழிலினி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள்,கலை இலக்கியப் பேராளர்கள், பல்துறைசார் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின்  மங்கல விளக்கினை
* சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர், ஒருங்கிணைப்பாளர், சைவநெறிக்கூடம்  

* மெய்டித்தொண்டர் சிவபசி விக்னேஸ் ஐயா, ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர், ஒருங்கிணைப்பாளர் „சிவபணி“, சைவநெறிக்கூடம்⁠

* திருமதி. அமலா சேரலாதன் அவர்கள் நிதர்சனம் ஊடகம்

* திருநிறை சின்னராசா இராதாகிருஸ்ணன்,
சைவத்தமிழ்ச் சங்கம், சூரிச் அருள்மிகு சிவன் கோவில்  தலைமை ஒருங்கிணைப்பாளர்

* திருமதி.நளினி செல்வராசா நூலாசிரியரின் உறவினர்.

* திரு. கந்தையா வசந்தகுமார், நூலாசிரியரின் உறவினர் 

* ⁠திருமதி.நிஷாந்தினி கந்தசாமி, பிரான்சிலிருந்து வருகைதந்த நூலாசிரியரின் உறவினர்.

* திரு.செல்லன் தயாபரன், ஜேர்மனியிலிருந்து வருகைதந்தவர்.

* திரு.மரியநாயகம் கபிலேஸ், நூலாசிரியரின் பள்ளித் தோழன்.

* செல்வி தமிழினி விநாயகமூர்த்தி, தலைவி,இறெயின்தாளர் தமிழ்மன்றம், செங்காளன் மாநிலம்.

* செல்வன் யோகநாதன் ஆதித்தன், நிர்வாக உறுப்பினர், இறெயின்தாளர் தமிழ்மன்றம், செங்காளன் மாநிலம்.

* ⁠அஷ்டாங்கயோகி நாகலிங்கம் குலசிங்கம், நல்வாழ்வுதரும் யோகாக்கலை நூலாசிரியர் மற்றும் யோகா பயிற்றுவிப்பாளர்.

ஆகியோர் ஏற்றுவைத்ததைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலின் மங்கலவாத்தியக் கலைஞர்களிள் மங்கல இசையுடன் நிகழ்வு ஆரம்பமாகி
திருமதி. கார்த்திகா முரளிதரன் அவர்கள் தமிழர்களறி சார்பில் வரவேற்புரையை நிகழ்த்தினார்.

தொடர்ந்து
சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் அருள்நல்வாழ்த்துரையை வழங்கினார்.

ஈழத்தின் மூத்த படைப்பாளி திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் அறிமுகவுரையினை வழங்கினார். அவர் தனது உரையில் ஈழத்தில் தோன்றிய படைப்பாளிகளை நினைவுகூர்ந்து தாய்மண் அளித்த படைப்பாளிகளின் எழுத்தையும் அப்படைப்பால் ஈழத்தமிழ் இலக்கியத்தில் ஆன பங்களிப்பையும் சிறப்பித்து திரு.து.திலக்(கிரி) அவர்களையும் அவரின் படைப்பையும் அறிமுகம் செய்தார்.

இசை ஆசிரியை, பாடகி, எழுத்தாளர் திருமதி மணிமொழி கிருபாகரன் அவர்கள் திரு திலக் அவர்களின் படைப்புக்கு வாழ்த்துரையாற்றினார்.

உலகம் போற்றும் 
பாவலர் அறிவுமதி அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெண்திரையில் வாழ்த்துரையினை வழங்கியிருந்தார.அவரது உரையில் புனைவுத்திறனுடன் திலக் அவர்களின் கவித்திறனை விளக்கினார்.

 தொடர்ந்து….
வெளியீட்டுரையினை தமிழர் களறி ஆவணக் காப்பகம் 
திரு. தில்லையம்பலம் சிவகீர்த்தி அவர்கள் ஆற்றினார். அவர் தனது உரையில் இலக்கியம் வழியாக எமது வரலாற்றை பதிவு செய்ய வேண்டிய அவசியத்தைக் குறிப்பிட்டார்.  சுவிட்சர்லாந்தில் தமிழர்களால் இன்றுவரை முன்னெடுக்கப்பட்ட பணிகளை விவரித்து, திரு திலக் அவர்களின் படைப்புகள் இக்காலத்தில் எதற்குத் தேவை என்பதைத் தெளிவுபடுத்தியும், அனைத்து தமிழர்களும் எமது வரலாற்றை உண்மையுடன் பதிவு செய்து அதனை எதிர்காலத் தலைமுறைகளுக்குப் பரிமாறவேண்டும் எனக் கூறினார்.

தொடர்ந்து
நூலின் நயப்புரையினை 
தமிழ் ஆசிரியையும் படைப்பாளியுமான திருமதி பிரேமினி அற்புதராசா அவர்கள் ஆற்றினார். அவர் தனது உரையில் கூர்மையான எழுத்துக்களில் தாய்மொழி, தாயகம், காவல் தெய்வங்கள் உறவுகள், வலிசுமந்த வாழ்வு, காணாமல் போனவர்களை எதிர்பார்க்கும் குடும்பங்களின் துயரம், அரசியல், புலம்பெயர்ந்தோரின் வாழ்வு, வாழ்க்கையின் நிலையாமை, சமுதாயச்சீர்கேடு ஆகிய கருக்களை எழுத்தில் பகிர்ந்திருப்பதை சிறப்பித்து நயப்புரையாற்றினார்.

இந்நிகழ்வின் சிறப்புரையினை ஊடக துறையைச் சேர்ந்த ஆசிரியர் திரு சு. ரவி அவர்கள் திரு.து.திலக்(கிரி) அவர்களைப் பற்றி பேசுகையில், இவரது மேடைப்பேச்சு ஆளுமை அவரது ஆசானிடம் இருந்து பெறப்பட்ட ஒன்று என்று 1990களில் தாயகத்திலிருந்து வெளிவந்த படைப்புகளை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்ததோடு திரு.திலக் அவர்களின் எழுத்துக்கள் தாயகத்தின் ஆஸ்தான கவிஞர் புதுவை அண்ணையின் படைப்புபோல் வளர வேண்டும் என வாழ்த்தி உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது.
முதன்மைப் பிரதிகளை நூலாசிரியரின் சகோதரி திருமதி தமிழ்ச்செல்வி வசந்தன்  வழங்க ஊடகத்துறை ஆசிரியர் திரு. சு. ரவி அவர்களும், மூத்த படைப்பாளி திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களும், சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்களும் பெற்றுக்கொண்டனர். 

தொடர்ந்து ஏற்புரையினையும் நன்றியுரையினையும்  நூலாசிரியர் திரு. திலக் அவர்கள் ஆற்றினார். அவர் தனது உரையில் 
 இன்றைய சந்திப்பினால் பல விதைகள் என் உள்ளத்தில் விதைத்துள்ளது என்றும் எனது ஆசானோடு பழகிய காலங்கள் தன்னைச் செப்பனிட்டதாகவும் இப் படைப்பு வெளிவர காரணமாக இருந்த அனைவரையும், பெயர் குறிப்பிட்டு நன்றி செலுத்தினார். இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்களுக்கு நன்றி உரைத்து நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து நூலின் பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டு இரவு உணவுடன் வெளியீட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.


செய்தி ஆக்கம்
“தமிழர் களறி”ஆவணக்காப்பகம்,
பேண்,
சுவிற்சர்லாந்து.





















சுவிற்சர்லாந்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா "சிதறல்கள் 100” (இரண்டாம் பதிப்பு) Reviewed by Author on October 29, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.