அண்மைய செய்திகள்

recent
-

தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் A.அன்ரன் (கமல்) அவர்களின் உள்ளத்தில் இருந்து-


பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 வன்னி தொகுதி - மன்னார் மாவட்டம்

A.அன்ரன் (கமல்)

தேசிய ஜனநாயக முன்னணி

“ஊழல் அற்ற அரசுடன் பயணிக்கும் ஏழைகளின் நண்பன் கமல்”

எனது அன்பிற்கினிய அன்பார்ந்த அன்பு கனிந்த பாசத்துக்குரிய பண்பில் உயர்ந்து அன்புக்கு இனிய தமிழ் பேசும் வன்னி மக்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

மன்னார் மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட அல்பிறட் அன்ரன் (கமல்) ஆகிய நான் எனது வன்னி தொகுதி தமிழ் பேசும் மக்களின் பூரண விடியலுக்காக முன்னின்று அதி உன்னத சேவை செய்யும் நோக்குடன் தேசிய ஜனநாயக முன்னணி கட்சியில் வன்னி தொகுதியில் 2024 பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய ஊழல் அற்ற அரசுடன் பயணிக்க உள்ளேன்.

இத் தேர்தலானது காலம் காலமாய் நலிவுற்று, சிதைவுற்று, அபிவிருத்தி இன்றி கிடக்கும் வன்னி தமிழ் மக்களின் தலை விதியை நாமே நிர்ணயிக்கக் கூடிய தீர்மானமாகும். 

 நான் பாராளுமன்றம் சென்று எனது எண்ணக்கருவில் உள்ள விடயங்களை கூறுகின்றேன்.

•அவ்வவ்போது எமது வன்னி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு ஈடுபாட்டுடன் முகம் கொடுப்பேன்.

விவசாயிகளின் முதுகெலும்பாக விளங்கும் கட்டுக்கரை குளம் உட்பட பெரிய பெரிய குளங்களை நவீன முறையில் புணரமைத்து அதி உயர் விளைச்சலை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதியை உருவாக்கி அதி உன்னத அபிவிருத்தி கண்ட விவசாய துறையாக்குவேன் வன்னித் தொகுதியை

* மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வைப் பெற்று கொடுத்தல், ஆழ்கடல் மீன் பிடித்துறை யை மேன்படுத்தி தன்னிறைவு அடைய செய்வேன்

கல்வி கற்கும் மாணவ,மாணவிகளுக்கு ஊக்குவிப்பு

விளையாட்டு கழகங்களுக்கான ஊக்குவிப்பு

இளைஞர், யுவதிகளுக்கான தொழில் முயற்சிகள் உருவாக்குதல்

* கல்வி கற்று முடித்த பட்டதாரிகளுக்கான வேலை வாய்புகள்

* சிறு கைத்தொழில் ஊக்குவிப்பு

“அபிவிருத்தியின் இலக்கு, விவசாயிகளின் கனவு நிறைவு, மீனவர்களின் நண்பன்,பலம்,ஏழைகளின் தோழன் கமலை ஆதரிப்போம் வெற்றி பெறுவோம்"

எனது இத்தகைய எண்ணக் கருவானது செயல் வடிவம் பெற எமது வன்னியின் மக்களாகிய நீங்கள் அனைவரும் கார் சின்னத் திற்கும் X இலக்கம் 1 இற்கும் நேரே வாக்களிப்பதன் மூலம் எனக்கு ஆதரவு வழங்குமாறு அன்போடு கேட்டு நிற்கிறேன்.

காருக்கு நேரே புள்ளடி வன்னித் தொகுதிக்கு இதுவும் ஓர் ஏணி படி

அன்புடன்

A.அன்ரன் (கமல்)

தேசிய ஜனநாயக முன்னணி




தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் A.அன்ரன் (கமல்) அவர்களின் உள்ளத்தில் இருந்து- Reviewed by Author on October 26, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.