அண்மைய செய்திகள்

recent
-

லிங்கா படத்தில் நீக்கப்பட்ட அந்த ஆறு காட்சிகள் எவை?


லிங்கா படம் பற்றிய கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தின் நீளம் படத்தின் விருவிருப்பை குறைப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

இந்நிலையில் படத்திலிருந்து 10 நிமிடக் காட்சிகள் நேற்றைய தினம் நீக்கப்பட்டது.

லிங்காவில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன, என்ற விடயம் வெளிவந்துள்ளது. படத்தில் மொத்தமாக ஆறு காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

1.மரகத நெக்லஸ் திருடும்போது, கதவில் அனுஷ்காவை விட்டு அடையாளம் பண்ண வைக்கும் காட்சி

2.ரஜினியை வரவேற்று புலவர் ஒருவர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து கவிதைகளைச் சொல்லி பரிசு கேட்கும் காட்சி

3.தன் தோழிகளுடன் சோனாக்ஷி செய்யும் சேட்டை காட்சி

4.அணைக்கட்டு தொடர்பான திட்டம் வரையப்பட்டுள்ள ஆவணத்தில் சோனாக்ஷி கோப்பியைக் கொட்டிவிடும் காட்சி

5.ராஜா லிங்கேஸ்வரன் பிறந்த நாளுக்கு விருந்தினர்கள் வரும் நீண்ட காட்சி

6.படத்தின் இறுதியில் வரும் பலூன் காட்சியில் ஒரு பகுதி

படத்தின் நீளத்தை குறைப்பது பற்றி பட வெளியிட்டுக்கு முன்பே ரஜினி பேசினாராம். எனினும் 4 வருடங்களுக்கு பிறகு படம் வந்திருப்பதால் இரசிகர்களுக்கு சலிக்காது, எதையும் குறைக்கத் தேவையில்லை என்று ரவிக்குமார் உள்ளிட்டோர் கருதியதால் அப்படியே விட்டிருக்கிறார்கள்.
லிங்கா படத்தில் நீக்கப்பட்ட அந்த ஆறு காட்சிகள் எவை? Reviewed by NEWMANNAR on December 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.