அண்மைய செய்திகள்

recent
-

இந்த மாத்திரையை கையால் தொட்டாலே மரணம் தான்: உஷார் ரிப்போர்ட்,,,,


அமெரிக்காவில் சக்திவாய்ந்த furanyl fentanyl ரக மாத்திரைகளை கையால் தொட்டதற்கே பலர் உயிரிழந்துள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தபட்டுள்ளது.

அமெரிக்கா பொலிசார் பொது மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்கள்.

அதில், furanyl fentanyl என்னும் சக்தி வாய்ந்த மாத்திரையை கையால் தொட்டாலே ரசாயானம் தோல் வழியாக உடலுக்குள் நுழையும்.

பின்னர் அது ரத்ததில் ஊடுருவி மூச்சு பாதிப்பு, வாந்தி மற்றும் நினைவிழப்பை ஏற்படுத்தி அடுத்த சில விநாடிகளில் இதய இயக்கத்தைத் நிறுத்தி உயிரைப் பறிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது மாத்திரை மற்றும் பவுடர் வடிவில் வருகிறது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மட்டும் கடந்த வருடத்தில் 19 பேர் இந்த மாத்திரையால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2015 மற்றும் 2016ல் அமெரிக்காவின் 5 மாநிலத்தில் furanyl மாத்திரையால் 128 பேர் இறந்துள்ளனர்.

இதனுடன் சேர்ந்து U-47700 என்னும் ரக மாத்திரைகளும் விற்பனைக்கு வருவதாகவும் இது ஹெராயின் போதை மருந்து போல மாத்திரைகள் மற்றும் ஊசியில் வருவதாக தெரியவந்துள்ளது.

இதனால் ஏற்படும் பாதிப்பை சரி செய்யும் மருந்துகள் அமெரிக்காவில் இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை என்பது முக்கிய விடயமாகும்.

10 கிலோ அளவிலான furanyl fentanyl மருந்துகளை சில மாதங்களுக்கு முன்னர் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

அமெரிக்காவில் இந்த மாத்திரை அதிகமாக புழக்கத்தில் உள்ள நிலையில், கடந்த மாதம் இந்த பயங்கர மாத்திரையால் பிரித்தானியாவிலும் 4 பேர் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாத்திரையை கையால் தொட்டாலே மரணம் தான்: உஷார் ரிப்போர்ட்,,,, Reviewed by Author on May 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.