கிளிநொச்சியில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் A9 வீதியில் குறித்த விபத்து இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்றின் சில்லில் காற்று இறங்கிய நிலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே பயணித்த வேனுடன் மோதியதுடன் மற்றுமொரு வேனுடனும் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் பிரதேச மக்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த விபத்து காரணமாக A9 வீதி ஊடான போக்குவரத்து அரை மணிநேரத்திற்கு மேல் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
கிளிநொச்சியில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து
Reviewed by Vijithan
on
February 01, 2026
Rating:
Reviewed by Vijithan
on
February 01, 2026
Rating:
.jpg)

No comments:
Post a Comment