முள்ளிக்குளம் மக்களிற்கு கூட்டமைப்பும் மன்னார் ஆயர் இல்லமுன் துரோகமிழைத்துள்ளது! -அன்ரனி யேசுதாசன்
முள்ளிக்குளம் மக்களது அவல வாழ்வு பற்றிய ஊடகவியலாளர் சந்திப்பொன்று யாழ்.ஊடக அமையத்தினில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றிருந்தது.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் இதற்கான ஆதரவை வழங்கியிருந்தது.முள்ளிக்குளத்திலிருந்து வருகை தந்த முகாம் மக்களது பிரதிநிதிகள் இருவர் அங்கு கருத்துக்களினை வெளியிட்டிருந்தனர்.
முள்ளிக்குளம் மக்களது அவல வாழ்க்கை மாறியிருக்கவில்லை.தொடர்ந்தும் முகாமினுள் கடற்படையினரின் கண்காணிப்பின் கீழ் அகதி வாழ்க்கை தொடர்கின்றது.கூட்டமைப்பினரை பொறுத்தவரை போராட்டத்தை எப்படியேனும் முடித்து அரசிடம் நல்ல பெயர்வாங்கவேண்டியிருந்தது.அதை அவர்கள் செய்துமுடித்துவிட்டனர்.வாக்களித்த மக்களினை பற்றி அவர்கள் சிந்திக்கவேயில்லை.
இவர்களது ஆசைவார்த்தைகளினை நம்பி நாம் நட்டாற்றினில் விடப்பட்டுள்ளோம்.எமது நிலவிடுவிப்பிற்கான தொடர்போராட்டத்தை கூட கைவிட்டுள்ளோம்.எமது வீடுகளினில் கடற்படையினர் குடும்பங்கள் சுகபோகமாக வாழ்கின்றன எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
முள்ளிக்குளம் மக்களது போராட்டத்தை முடக்கியவகையினில் செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் தமிழரசு தலைவர்;களே பதிலளிக்கவேண்டியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தனர்.
முள்ளிக்குளம் மக்களின் பிரச்சனைகள் விடயத்தில், இலங்கை கடற்படையினரும், மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்ல பிரதிநிதிகளும் ஆங்கில மொழியில் பேசி தனித்து தீர்மானம் எடுத்துவிட்டு அப்பாவி மக்களை ஏமாற்றிவிட்டதாக தேசிய மீனவர் ஒத்தழைப்பு இயக்கத்தின் வட, கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசுதாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை பாதுகாப்பதில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆர்வம் காட்டியது போன்றே இப்போதும் தெற்கு ஆட்சியாளர்களிற்கு மன்னார் ஆயர் இல்லம் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கர்தினாலின் இந்த நடவடிக்கை காரணமாகவே தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையான இனப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் போனதாகவும் அன்ரனி யேசுதாசன் கடுமையாக சாடியுள்ளார்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடக சந்திப்பொன்று இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய மீனவர் ஒத்தழைப்பு இயக்கத்தின் வட, கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசுதாசன், மன்னார் முள்ளிக்குளம் மக்களின் விடயத்தில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் செயற்பாட்டையே மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லமும் பின்பற்றுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.
முள்ளிக்குளம் மக்களிற்கு கூட்டமைப்பும் மன்னார் ஆயர் இல்லமுன் துரோகமிழைத்துள்ளது! -அன்ரனி யேசுதாசன்
Reviewed by NEWMANNAR
on
June 06, 2017
Rating:

No comments:
Post a Comment