அண்மைய செய்திகள்

recent
-

நியூ மன்னாரின் விம்பம் பகுதியில் ..கலாவித்தகர் இசைக்கலைமாமணி அ.ஜெனிபர் அருள்மொழி

நியூ மன்னாரின் விம்பம் பகுதியில்  நம்மோடு பேசவருகின்றார் சங்கீத ஆசிரியர் பாடகி சங்கீத கலாவித்தகர் இசைக்கலைமாமணி அ.ஜெனிபர் அருள்மொழி லெம்பட் அவர்களுடனான சந்திப்பின்போது..............................

இருள் சூழ்ந்த இருவிழி
இவள் வழி தனி வழி
இசைமகள் அருள்மொழி
இசையால் உலகு என்னனைக் காண ஆசை…..

சற்றுநேரம் அமைதி எனக்குள் பின் என்னை அறிமுகம்செய்துகொண்டு
தங்களைப்பற்றி---
நான் அ.ஜெனிபர் அருள்மொழி லெம்பேட் எனது தந்தை எஸ்.அந்தோனி லெம்பேட் தாய் ஏ.றொசாரி பீரிஸ் சகேதரன் சகோதரியுடன் எனது செந்தபூமியான 10வட்டாரம் வங்காலையில் வசித்துவருகின்றேன்.

தங்களின் கல்விச்செயற்பாடு பற்றி-
எனது மூத்தசகோதரி எனது தாயின் தனிமைநிலை காரணமாக தரம்10 உடன் கல்வியை இடைறிறுத்தினாள் நானோ எனது ஆரம்பக்கல்வியினை வங்காலையிலும் சாதாரணதரம் உயர்தரம் கல்வியினை சுண்டுக்குழி மகளிர் உவெஸ்லி கல்லூரியிலும் யாழ்ப்பாணத்திலும் இசைக்கல்வியினை மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா இசைநடனக்கல்லுரியிலும் கற்று பட்டதாரியகிதற்போது நான் மன்.வங்காலை புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்தில் 12 வருடங்களாக ஆசிரியராக பணிபுரிகின்றேன்.

இசைமீதான ஆர்வம் எப்படி உருவானது…..
சின்ன வயசில் இருந்தே எனக்கு ஆர்வம் இருக்கின்றது காரணம் எனது அப்பா அம்மா சகோதரர்கள் நன்றாகப்பாடுவார்கள் ஆர்வம் உள்ளவர்கள்

தங்களுக்கு இந்த பார்வைப்பிரச்சினை வரக்காரணம் என்ன---
பரம்பரைகுறைபாடு தான் என்று சொல்லவேண்டும் எனது தந்தையும் தாயும் மச்சான் மச்சாள் உறவுமுறையினை கொண்டவர்கள் இருவருக்கும் பார்வைக்குறைபாடு குறைவாக இருந்ததினால் தான் எங்களுக்கும் வந்துள்ளது. ஆனால் எங்கள் குடும்பத்தில் எனக்கு பார்வை நன்றாகத்தான் இருந்தது 15வயதுக்குபின்பதான் எனது கல்லியின் மீது இருந்த பிடிப்பினாலும் கண்ணை தகுந்த பரிசோதனை செய்யாமல் விட்டதினாலும் அதுபோல இன்னொருசம்பவம் நடந்தது எனது கண்ணுக்கு விடப்பட்ட மருந்து மாறிவிடப்பட்டதன் விளையவாக கண்ணுக்கும் மூளைக்கும் தொடர்புபடுத்தும் பார்வை நரம்பு பழுதடைந்துவிட்டதாகவும் அதனால் தான் எனது பார்வை முற்று ழுதாகப்பறிபோனது.

உங்களது இந்த நிலையிலும் கல்விச்செயற்பாட்டுக்கும் இசைக்கல்விக்கும் பெற்றோரின் பங்களிப்பு என்றால்…
அது வார்த்தைகளில் சொல்லி விடமுடியாது என்னோடு எனது கல்விக்காகவும் எனது கண்தொடர்பான சிகிச்சைக்காகவும் மிகவும் சிரமமும் வேதனையும் துன்பம் அடைந்தது என்றால் எனது தந்தைதான் தற்போது 72வயதாகின்றது. இப்பதான் கொஞ்சம் ஓய்வாக இருக்கின்றார் இருப்பினும் மனதில் கவலை இருக்கும் தானே அம்மாக்கும்.
எனக்கும் எனது தம்பிக்கும் ப்பிறைன் மிசின் வாங்கித்தந்தார் எனது தந்தை அந்த மிசின் ஒன்றின் விலை சுமார் 100000 இலட்சம் ருபாய் என்றால் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் எவ்வளவுக்கு எனக்கும் எனது சகோதரர்களு;ககும் பெற்றோரின் பங்களிப்பு அதுமட்டுமல்ல இசைக்கருவிகளான வயலின் மெலோடிக்கா கிற்றார் என்பனவும் வாங்கித்தந்தார் எமது தேவைகள் எல்லாமே நிறைவேற்றினார்கள் பெற்றோர்கள்.

வங்காலையில் உங்களது சங்கீதகற்றல் தொடர்பாக நிலை…
எங்களது வங்காலைப்பாடசாலையில் இரண்டு இசைக்குழு உள்ளது மேலைத்தேயம் மற்றும் கீழைத்தேயம் இரண்டினையும் நான்தான் வழிநடத்துகின்றேன்.

அதுபோல எனது மாணவர்களுக்கும் கற்றுக்கொடுக்கின்றேன் நன்றாகவிளங்கப்படுத்துவேன்.என்னைக்குழப்பக்கூடாது ஆனால் குழப்பங்கள் ஏற்படும் மாணவமாணவிகள் என்னுடன் நல்லநிலையில் தான் உள்ளார்கள் ஒரு சில ஆசிரியர்கள் தான் என்மீது உள்ள கோபத்தினை எனது மாணவமாணவிகள் மூலம் வெளிப்படுத்துவார்கள் என்னைப்போன்றவர்கள் இலகுவாக எழுந்த நடக்கமடியாது வெள்ளைப்பிரம்புடன் தான் எமது செயற்பாடு முரண்பாடுகள் எல்லாவற்றினையும் சமாளித்துக்கொண்டு போகவேண்டியதுதான் அப்போது ஒரு ஆசிரியல் சொன்னவிடையம் தான் ஞாபகத்திற்குவரும் டீச்சர் காய்க்கிற மரத்திற்குத்தான் கல்லெறிவிழும் உங்களிடம் திறமையுள்ளது உங்களை வெல்ல முடியாது உள்ளது அதை உணர்நது கொள்ளளுங்கள் அதை நினைத்து அமைதியாகிவிடுவேன். எனது எழுத்து முறைதான் வேறுபடுமே தவிர பாடவிடையம் வேறுபடாது உயர்தரம் முடித்தபின்பு கற்றுக்கொடுத்தேன் பட்டதாரியாகிய பின்பு 12 வருடங்களாக கற்பித்து வருகின்றேன். என்னிடம் கற்றவர்கள் பல இடங்களில் சங்கீத ஆசிரியர்களாக இருக்கின்றார்கள் இப்பவும் என்னிடம் விடுதேடிவந்து சங்கீதம் கற்றுக்கொள்ளுபவர்கள் இருக்கின்றார்கள்.

உங்களைக்கவர்ந்த கருத்துப்பாடம் என்றால் -----

ஆம் நிச்சயைமாக எனது குரு பேராசிரியர் மௌனகுரு அவர்கள் ஒரு முறை விரிவுரையின் போது சென்னது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கின்றது ஒரு திறமையுள்ள கலைஞன் ஆனவன் முதலில் கடவுளுக்கு பயப்படுவான் இரண்டாவதாக தன்னுடைய தாய் தந்தைக்குப்பயப்படுவான் மூன்றாவதாக தனது குருவுக்குப்பயப்படுவான் இந்த மூவரையும் தவிர வேறு யாருக்கும் பயப்படவும் மாட்டான் தலைவணங்கவும் மாட்டான் அடிபணியவும் கூடாது என்று சென்னவாக்கியத்தை எனது தாரகமந்திரமாக கொண்டு செயலாற்றுகின்றேன் நான் யாருக்கும் அஞ்சப்போவதும் இல்லை கெஞ்சப்போவதும் இல்லை…

இசைத்துறையில் உங்களின் சாதனை என்றால் ----

நான் சாதனைசெய்துள்ளேன் என்னைப்போன்றவர்கள் செய்வது சாதனைதானே மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்தமட்டில் என்னைப்போன்ற மாற்றுத்திறனாளியான பெண் ஒருத்தி 03பட்டப்படிப்புக்களை நிறைவுசெய்ததோடு இசைதொடர்பான ஸப்த ஸ்வரப்புன்னகை நூல் ஒன்றினையும் வெளியட்டு இருக்கின்றேன் அத்தோடு ஆசிரியராக பலரை உருவாக்கியுள்ளேன் சாதனைதானே.

நீங்கள் கலந்து கொண்ட இசைப்போட்டிகள் பற்றி---
•    மட்டக்கள்ப்பில் 203ம் படைப்பிரிவு பிரிகேடியர் அன்ரனிஸ் அவர்களாள் போட்டி ஒன்று நடத்தப்பட்டது அப்போது நான் மட்டக்களப்பு விபுலானந்தாக்கல்லூரியில் கற்றுக்கொண்டு இருக்கின்றேன் அப்போது எனக்கு கிடைத்த சந்தர்ப்ம் கிடைத்தது போட்டியில் கலந்த கொண்டு 20பேருக்கு 3இசைக்குழுவினை பகிர்ந்து கொடுத்தார்கள் எனக்கு அமொக் இசைக்குழுவில் பாடி நான் முதலாவதாக வந்தேன் பெறுமதியான சான்றிதழும் 5000ரூபா பணப்பரிசும் தந்தார்கள்.
•    அதே போல அனோஜா வீரசிங்கம் இராமா யஉவiபெ எழiஉந  வசயniபெ குரல தேர்வுப்பயிற்சி  07 நாள் பயிற்சியில் கலந்து கொண்டு 80 பேரில் 12 பேரினை தெரிவு செய்தார்கள் அதில் நானும் ஒருத்தி வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தும் யுத்த சு10ழல் காரணமாக தடைப்பட்டுப்போனது.

•    1982-2-15 கிறிஸ்மஸ் நிகழ்வு யாழப்பாணம் இருந்து கொழும்பு சென்றோம்
•    1994-மெல்லிசைப்பாட்டு வானொலியில் அரங்கேற்றம்
•    1999 ITN உதயதரிசனம் எனும் நிகழ்ச்சியில் எனது செவ்வி  வந்தது ஒளிபரப்பானது.
•    அருட்தந்தை லீனஸ் அவர்களினால் வெளியிடப்பட்ட இதயம் திறந்தேன் இறுவட்டு 04பாடலுக்கு ரியூன் போட்டு அதில் இரண்டு பாடலை இயற்றிப்பாடியுள்ளேன்.
•    அருட்தந்தை மலர்வேந்தன் அவர்களின்  புலரும் பொழுது இறுவட்டிலும் பாடியிருக்கின்றேன்.
எனக்கு எல்லாம் சோதனைதான்அதிலும் சாதனைதான் சார்மிளா கொரேரா ராஜதிக்கத்தே என்னில் நல்ல மதிப்பு வைத்திருந்தார் அதுபோல அருட்தந்தை போல் சற்குணராஜா அவர்கள் அநாதைபபிள்ளைகளின் இல்லம் ஒனறு வைத்திருக்கின்றார் அவர் அன்பும் இரக்கமும் கொண்டவர் அவரின் ஏற்பாட்டில் 2-1/2மணித்தியாலம்  இசைகலந்த நாட்டிய நாடகம் அதில் பதினாறு பாட்டுக்கள் இடையிடையே வசனம் வரும் அந்த பதினாறு பாட்டுக்கும நான் தான் ரியூன் போட்டுப்பாடினேன் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லு{ரியில் 03 மேடைகள் அமைத்து ஒரு மேடை பாட்டுப்பாடுபவர்கள் இசையமைப்பவர்கள் ஒரு மேடை என மிகவும் சிறப்பாக நடைபெற்றது நான் அப்போது கற்றுக்கொண்டிருக்கும் மாணவி அப்போதே என்னை நம்பி இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்தார்கள் நான் அதையும் சிறப்பாக நடத்தி முடித்தேன்;.
•    அந்த நிகழ்வினை சிறப்பாக நடித்துமுடித்தமைக்காக 02-12-2002 பொன்னாடைபோர்த்தி  கௌரவித்தார்கள் இது என்னுடைய வாழ்வில் போர்த்தப்பட்ட முதல் பொன்னாடை மறக்கமுடியாத நாள் மகழ்ச்சியின் எல்லைக்கே சென்றேன் என்னுடன் சேர்த்து கிறிஸ்தவபாடல் எழுதிய வாகரைவாணன் அவர்களுக்கும் நிகழ்வினை ஒழுங்கமைத்த மற்ற ஆசிரியருக்கும் போர்த்தி கௌரவித்தார்கள். அந்த நிகழ்வில் என்னை முன்னிலைப்படுத்தியதோடு குத்துவிளக்கேற்றவும் வைத்தார்கள் அப்படியானதொரு நிகழ்வு இதுவரை எனது மன்னார் மாவட்டத்தில் எனக்கு கிடைக்கவில்லை.
•    2010தமிழ்செம்மொழி விழாவில் 45நிமிடம் இசைக்கச்சேரி செய்தேன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.
•    2011 ஆண்டு ஆளுநர் சந்திரசிறி அவர்களினால் யாழ்ப்பாணம் 400 இசைக்கலைஞர்கள் கலந்து கொண்ட சங்கீத சபா நிகழ்வில் 300பேர் சேர்ந்து இசைவழங்க 100பேருடன் நானும் இணைந்து வீணை கிற்றார் வயலின் தம்புரா கெஞ்சிரா-கடம் மேளம்-ஒகஸ்ரா-புலூட்-இன்னும் இசைக்கருவிகள் சேர்ந்து இசைத்த இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட 400 கலைஞர்களில் இருந்து 20கலைஞர்களை தேர்வுசெய்தார்கள் அதில் நானும் ஒருத்தி அதுவும் சிறியவள் எனும் போது எவ்வளவு பெருமையான விடையம்.
•    2008ம் ஆண்டில் வவுனியாவில் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் எனது ஸப்த ஸ்வரப்புன்னகை என்னும் நூலினை ஒரு செமினார் போல் செய்து சங்கீதக்கச்சேரியுடன் வெளியிட்டேன் ஊடகவியலாளர் மாணிக்கவாசகர் உட்பட எல்லோரும் வந்து எனக்கு முழுஆதரவு தந்தார்கள் அதைமறக்கமுடியாது.

இசைக்கு தற்போது வரவேற்பு இல்லை என்பது பற்றி---
யார் சொன்னது மன்னார் மாவட்டத்தில் தான் இசைக்கு மக்கியத்துவமும் இல்லை வரவேற்பும் இல்லை ஏனைய மாவட்டடங்களில் இசைக்கல்லூரிகள் உள்ளது இசையை அதிகபணம் செலவு செய்து கற்றுக்கொள்ளுகின்றனர் இசைக்கருவிகள் ஒவ்வொன்றினதும் விலைகள் அதிகம் தான் அதைப்பெருட்படுத்தாமல் வாங்கி கலையினையும் இசையினையும் கற்றுக்கொள்ளுகின்றார்கள் வளர்க்கின்றார்கள் அதற்கான ஊக்குவிப்பும் வரவேற்பும் உள்ளது மன்னாரில் அவ்வாறு இல்லை கல்வியில் அதுவும் கணிதம் விஞ்ஞானம் வர்த்தகம் போன்ற பாடங்களை கற்றுக்கொள்ளுகின்றார்கள் ஆனாலும் ஒழுங்காககற்றுத் தேறுவதில்லை தேடிக்கற்பதில்லை நாம் ஆடைகள் பல ஆயிரம் செலவு செய்த வாங்குகின்றோம் அது குறிப்பிட்ட நாளில் பழதாகின்றது காணமல்போகின்றது. போடமுடியாமல் போகின்றது ஆனால் கற்றகல்வி அப்படியல்ல என்றுமே எம்முடன் தான் இருக்கும்  நான் பலமுறை அழுதிருக்கின்றேன்.

 இந்த மன்னார் மண்ணில் சங்கீதத்திற்கு வரவேற்பு இல்லாத இடத்தில் நான் பிறந்திருக்கின்றேன் என்று என்னுடைய திறமைகள் எல்லாம் இந்த வங்காலைக்குள் அடங்கிப்போகின்றது வெளியில் கொண்டுசெல்ல வாய்ப்பில்லை என்பது எனது தீராத கவலையாகும்.

நீங்களும் மாற்றுத்திறனாளி என்ற வகையில் மாற்றுத்திறனாளிகள் மடடில் சமூகத்தின் பார்வை பற்றி---
சமூகம் என்ன நினைத்தாலும் பரவாயில்லை ஆனால் மாற்றுத்திறனாளிகள் என்றால் மாற்றாற்றல் உடையவர்கள் அவர்களிடம் விசேட திறமை இருக்கும் என்பதுதான் உண்மை அதை அவர்கள் இனம் கண்டு வளர்த்துக்கொள்ளுகின்றார்கள் ஏனையவர்கள் எனக்கு எல்லாம் தெரியும் என்றே இருப்பதும் முழுமையாக எதையும் கற்றுக்கொள்வதும் இல்லை தெரிந்து கொள்வதும் இல்லை அலட்சியமாக விட்டுவிடுவார்கள் என்னைப்பொறுத்த மட்டில் நான் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம்  என்னை இந்தளவுக்கு உயர்த்தியுள்ளது போராடிவெல்லவேண்டும் பின்வாங்க கூடாது எதையும் தாங்கி எதிர் நிச்சல் போடவேண்டும்.

தங்களுடைய இளமைக்காலத்திற்கும் தற்போதுள்ள வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடு பற்றி---
இளமையில் மிகவும் சந்தோஷமாக இருந்தேன் இப்போதும் சந்தோஷமாகத்தர் இருக்கின்றேன் இருந்தாலும் பெரிதாக சொல்லுவதற்கில்லை திறமையுள்ளவர்கள் மேல் அரைகுறையாகவுள்ளவர்களுக்கு பொறாமையாக இருக்கின்றது  என்னைப்போன்றவர்கள் திறமையாக சாதிக்க கூடாதா… எனது வழியில் தடைபோடுகின்றார்கள் நான் பலமுறை அழுதிருககின்றேன் ஆனாலும் நான் பின்வாங்கியதில்லை என்னுடைய வேலைகளை பெரும்பாலும் நான் தான் செய்கின்றேன.
 எனக்கு எனது அக்காவின் மகள் மிகவும் உதவியாக இருந்தால் தற்போது அவளும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளாள் இருப்பினும் நானே எனது கடமைகளை நானே செய்கின்றேன் எனது ஆடை எடுப்பது கூட நான்தான்
எப்படி சாத்தியமாகும் என்று கேட்டேன்---எனக்கு பிறவியில் இருந்தே கண்பார்வை இல்லாமல் இல்லை இடையில் தான் அதவும் 15வயதில் தான் இல்லாமல் போனது அந்த 15வயது வரை நான் எல்லாவற்றினையும் கண்டு பறவைகள் வண்ணங்கள் வாகனங்கள் எல்லாமே இரசித்திருக்கின்றேன்  அந்த உணர்வு எண்ணில் உள்ளது ஆடைகள் எடுக்கும் போது எனது தாய் இல்ல சகோதரி நிறத்தினை சொல்வார்கள் நான் தடவிப்பார்த்து எனக்கு பிடித்தமானதை எடுப்பேன் எல்லாமே எனது விருப்பம் தான்.

உங்கள் வாழ்வில் மற்க்கமுடியாத விடையம் என்றால்---
ஏன்னுடைய வாழ்க்கையே மறக்க முடியாதது தான் இருப்பினும் என்னுடைய நேசறி படிக்கும் போது நடந்தவை இன்னும் என்னால் மறக்கமுடியாது அதை சொல்லுகின்றேன் எனது வகுப்பாசிரியர் என்னை கணக்கெடுப்பதே இல்லை ஏன் என்று கூடகேட்பதில்லை அப்ப எனக்கு ஓரளவு பார்வை தெரியும் ஆனால் அந்த ஆசிரியர் அஆஇ கூட சொல்லித்தருவதில்லை மதர் கில்லடா கார்ட் என்ற சிஸ்ரர் மிகவும் அன்பானவர் இரக்கமுடையவர் அவர் தான் எனக்கு பார்வை குறைவு என்பதினால் தனது கொன்வென்டில் பெரிய எழுத்துக்களை கார்ட்போட்டில் எழுதி அ ஆ இ ஈ சொல்லித்தந்தார் அதுபோல் எனது அம்மம்மாவும் மணலில் பெரிதாக எழுதி சொல்லித்தந்தார்.

மதர்கில்டா கார்ட் சிஸ்ரர்  ஆர்மோனியம் வாசிப்பார் வாசிக்கும் போது நான் தான் நோட்ஸ் பிடிப்பேன் அப்படியே எனக்கு ஆர்வம் வந்தது அப்படியிருக்கும் போது தான் ஒரு நாள் 1977ம் எனக்கு 07வயது இருக்கும் எங்களுக்கு அந்த ரீச்சர் வகுப்பறையில் வைத்துப்படிப்பிப்பதில்லை மரத்திற்கு கீழ்வைத்துதான் படிப்பு நடக்கும் அந்த நாள் கோயில் கட்டிடம் உடைந்து சிறுசிறுகல்லுகள் பரவிக்கிடந்தது எல்லோரும் விளையாடும் போது என்னை சில மாணவமாணவிகள் அடித்து விழுத்திவிட்டார்கள்  நான் பெரும் சத்தமாக அழுகின்றேன் .

ரிச்சர் தன்னுடைய பேரப்பிள்ளைக்கு சூப்பி போத்தலில் பால்கொடுதுக்கொண்டு இருக்கிறா. இதுதான் அந்த ரிச்சரின் வேலை படிப்பிப்பதே இல்லை எனது சத்தம் கேட்டு மதர் கில்டா கார்ட் சிஸ்ரர் ஓடிவருகின்றார்  அப்போது குளத்தில் இருந்து வந்த ஐயாவும் வந்திற்றார்  ரீச்சர கூப்பிட்டு சிஸ்ரர் பேசுறா ஒழுங்காப்படிப்பிக்காம என்னசெய்றீர் பிள்ளைகள் எல்லாம் உம்முடையபொறுப்பில் தானே நம்பிவிட்டுப்போன இப்படியா பார்க்கிறது. பேரிய அதிகாரிகள்  இப்பவந்திருந்தால் உமது வேலை எல்லா பறிபோயிருக்கும் வாங்கிற சம்பளத்துக்கு ஒழுங்காப்பிள்ளைகள கவனித்து படிப்பிக்கவேண்டும் என்று கத்தினார்.

 அந்த ஜயா சொன்னார் நல்லா பேசுங்க சிஸ்ரர் இவஎங்க பிள்ளைகளைகவனித்து படிப்பிக்றிவ தன்ர பேரப்பிள்ளைகளுக்கு பால்கொடுப்பதுதான் வேலை இந்தப்பிள்ளைபோன அடுத்த மகள் பிள்ளைபெற அந்தப்பி;ள்ளைக்கு பால்கொடுக்கப்போற என்றதும் சிஸ்ரர் இப்படி ஊரார் பிள்ளைகளை ஏமாத்தின உனது மகளுக்கு பிள்ளையே பிறக்காமல் போய்விடும் என்று சாபம் போட்டமாதிரி கத்தி சொன்னார் சிஸ்ரர்…சிஸ்ரர் போட்டசாபம் போல் ரீச்சரின் மகளுக்கு பிள்ளையே பிறக்கவில்லை அந்த மகள் SSC மட்டும் தான் சித்திசெய்தார் தற்போது 60வயது ஆனால் வேறு எந்தப்பட்டமும் இல்லை நானோ இன்று 03பட்டங்களுடன் சங்கீத ஆசிரியராக இருக்கின்றேன்(அந்தச்சம்பவம் நடைபெற்றதால் தான் நானும் எனது குடும்பமும் மிகவும் மனவருத்தம் அடைந்து எனது கல்விக்காக யாழ்ப்பாணம் சென்றோம் இன்று சமூகத்தில் மதிக்கும் அளவுக்கு இருக்கிறேன். ஒருவேளை வங்காலையை விட்டுபோகாமல் இருந்திருந்தால்….????
ஆனால் ஒரு நம்பிக்கை மட்டும் தான் உங்களை எவ்வாறு படைத்த இறைவன் பாதுகாக்கின்றாரோ அதே போல் என்னையும் பாதகாத்துக்கொள்வார் கைவிடமாட்டார்.

மன்னாரில் கலைஞர்களை கௌரவிப்பதில்லை கண்டுகொள்வதம் இல்லை என்ற கருத்துள்ளது அதுபற்றி---
மன்னாரில் கலைஞர்களை கௌரவிப்பதில்லை என்பது உண்மைதான் அதற்கு முழுக்காரணமும் அந்தக்கலைஞர்கள் தான்  ஏன் என்றால் சங்கீத ஆசிரியர்கள் தனக்கு தெரியாததை தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் நிறைய சாதிக்கவேண்டும் சுறுசுறுப்பாக இசைக்கச்சேரிகள் சங்கீதக்கச்சேரிகள் அடிக்கடி அரங்கேற்றம் செய்யனும் புதிய புதிய மாணவமாணவிகளை உருவாக்கவேண்டும் பாடசாலை மட்டங்களில் இருந்து ஆரம்பிக்கப்படவேண்டும் தன்னுடைய திறமையினை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் அப்படிச்செய்வதால் தான் எல்லோருக்கும் தெரியும் கலைஞர்கள் தங்களது திறமையினை நிரூபிக்கவேண்டும் அப்படி நீரூபிக்கும் போது கட்டாயம் கலைஞர்களை கௌரவிக்கவேண்டும் என்பது எனது கருத்து.

சங்கீதம்கற்றுக்கொள்ளும் மாணவமாணவிகளுக்கு தங்களின் அறிவுரை என்ன—
எந்த துறையானாலும் தகுதி வேண்டும் உயர்தரத்தில் சங்கீதம் ஒரு பாடமாக எடுக்க விரும்பினால் சிறிய வயசில் இருந்தே அதற்காக தயாராக வேண்டும் சாதரணதரம் முடித்து உயர்தரம் வரும் 4தரங்கள் முடித்து இருக்கவேண்டு;ம் தியறி-70ம்பிறாட்டிக்கல்-30 தான் இருக்கும்  சாதாரணதரத்தில A சித்திபெற்றபிள்ளைக்குப்பாடத்தெரியாது இருக்கும் அதுதான் கட்டாயம் சங்கீதம் உயர்தரத்தில் படிப்பதற்கு குறைந்தது 3தரங்களாவது முடித்திருக்கவேண்டும். றாமா நாடகம் டான்ஸ் எதாவது ஒன்றையாவது முழுமையதகப்படித்திருக்கவேண்டும்.

 அப்போதுதான் நல்லமுறையில் சங்கீதம் கற்கமுடியும் ஆனால் மன்னாரில் இருந்து கணிதம் விஞ்ஞானம் வர்த்தகம் போன்றதை பாடமாக எடுத்து அதில் பெரிதாக தேர்ச்சி பெறாமல் கடைசியாக சங்கீதத்தினை ஒரு பட்டப்படிப்பாக நிறைவு செய்யும் போது எப்படி மன்னார் சங்கீதத்தில் முன்னுக்கு வரும். ஆனால் பல்கலைக்கழகத்தில் சங்கீதம் தவிர்ந்த ஏனையதுறைகளைப்படிப்பவர்கள் சங்கிதத்தினையும் ஒருபாடமாக ஒரு பகுதியினையாவது விரும்பிக்கற்கின்றார்கள் அப்படிக்கற்றுக்கொள்வர்களுக்கு சரியான மதிப்பும் கௌரவமும் உள்ளது.

உங்களது ஆளுமையினை வளர்பதற்கு ஏற்ற இடமாக மன்னார் உள்ளதா….
நான் முதலில் எனது வங்கலையில் இருந்து வெளியில் வந்து எனது திறமையினை வெளிப்படுத்த விரும்புகின்றேன் ஒரே இடத்திற்குள் முடங்கிக்கிடக்காமல் மற்ற சமூகத்தின் போய் வேலைசெய்யும் போது எனக்குரிய மரியாதையும் கௌரவமும் கிடைக்கும் அத்தோடு மரியாதையாக நல்ல விதமாய்ப்பழகுவார்கள்.சொந்த ஊரில் இயேசுநாதருக்கே மரியாதை இல்லை இவரை சிலுவையில் அறைந்து தொங்கவிட்டவர்கள் அந்தபரம பிதாவிற்கே இந்த நிலைமை என்றால் நான் ஒரு தூசுதானே அப்படித்தான் எனது திமையும் இங்கேயே அடங்கிப்போய் உள்ளது.

உங்களைப்போல் திறமையானவர்கள் அல்லது உங்களைக்கவர்நதவர்கள் பற்றி---
என்னைப்போல் மாற்றுத்திறனாளியான வாமதேவன் மாஸ்ரர் ஒராள் யாழ்ப்பாணத்தில்  இருக்கின்றார். என்று கேள்விப்பட்டிருக்கின்றேன் அவரிடம் தேடிப்போய் சங்கீதம் கற்கின்றார்களாம் அதைப்போல என்னிடமும் வந்து சங்கீதம் கற்கின்றார்கள் மன்னாரில் ஒருவரும் அப்படியில்லை இலங்கையில் நிறையப்பேர் இருப்பார்கள் ஆனால் எல்லோரும் எல்லா இசைக்கருவிகளையும் வாசிப்பார்கள் என்று சொல்லமுடியாது. திறமை எல்லலோரிடமும் இருக்கும் அந்த திறமைக்கு மதிப்பளிக்கவேண்டும் அத்தோடு நான் எப்பொழுதும் அவரைப்போல இவரைப்போல என்று நினைத்தில்லை நான் நானாக இருக்கவிரும்புகின்றேன் எனக்கு உதாரணம் என்றால் அது நானாகத்தான் இருக்கவேண்டு;ம்.   

உங்களுடைய இலக்கு என்று சொன்னால் அது---
என்னுடைய இலக்கு எனும் போது சங்கீதம் மூலம் நான் வெளியுலகிற்கு என்னை தெரியப்படுத்த வேண்டும் இசைக்கச்சேரிகளை வெளிநாடுகளில் நடத்தவிரும்புகின்றேன் ஆனால் இதுவரை எந்த வாய்ப்பும் எனக்கு கிடைக்கவில்லை ஆனால் எனது சிறுமுயற்சியால் எனது திறமையினை எழுத்துவடிவமாக ஸப்த ஸ்வரப் புன்னகை எனும் நூலினை வெளியிட்டு அயல்நாடுகளுக்கு ஆனுப்பியுள்ளேன் அதுபோல எனது பாடலில் ரியுனில் வெளிவந்த இறுவட்டுக்கள் வெளிநாடுகளில் உள்ளது அத்தோடு சமீபத்தில் எனது அக்காவின் மகன் லியோனிகுரூஸ் நானும் இணைந்து வயலின் இசையினை வாசித்து யூ டியூப்ல பதிவேற்றம் செய்தோம் நல்ல வரவேற்பு கிடைத்தது இப்படியான சிறுமுயற்சிகள் செய்துவருகின்றேன் விரைவில் எனது திறமையினை இவ்வுலகிற்கு பறைசாற்றுவேன் அதற்கான சந்தர்ப்பம் வரும் அதுவரை எனது முயற்சி தொடரும் இறைவனின் நம்பிக்கையும் உள்ளது.

மன்னாரில் தாங்கள் இசைக்கச்சேரி செய்ய எண்ணியுள்ளீர்களா…
ஆம் மன்னாரில் முதல் முறையாக இசைமாலை அதாவது கற்பனாஸ்வரம் என்னும் இசையில் 07-08-2017 சங்கீதஆசிரியர்கள் இணைந்து அதுவும் எனது தலைமையில் அரங்கேற்றம் செய்யவுள்ளோம் அதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது
.
தாங்கள் இதுவரை பெற்ற பட்டங்கள்-விருதுகள் பற்றி---
  • சங்கீத கலாவித்தகர்-வட இலங்கை சங்கீத சபை
  • Diploma In Music- சுவாமி விபுலானந்தா இசைடனக்கல்லூரி
  • B.F.A(Hons)Sip Music Eastern Univarsity Batticaloa
  • வவுனியா தமிழ்ச்சங்கம் பாராட்டுச்சான்றிதல்- 2008
  • கலைவிழா பாராட்டுச்சான்றிதழ்- 2009
  • மன்னார் தமிழ் செம்மொழி விழா நினைவுச்சின்னம்- 2010
  • கர்நாடக இசைப்பெருவிழா நினைவுச்சின்னம்-  22-05- 2011
  • மேலைத்தேய இசை-கர்நாடக இசை-சினிமா இசை என்ற மூன்று துறைகளையும் வாசிப்பதில் பரிச்சையமானவர்.
  • 1980 தொடக்கம் இன்று வரை தமிழ் திரைப்படப்பாடல்களும் கர்நாடக இசையும்-ஓர் ஒப்புநோக்கு-வட இலங்கை சங்கீதசபை-ஆசிரியர் தரம்
  • மன்னார் பாரம்பரியக்கலைகளில் கிறிஸ்தவத்தின் பங்கு-இசைக்கலைமாமணி-டிப்ளோமாக்கற்கை நெறி.
  • தமிழ்ச்சினிமாவில் கர்நாடக இசையின் தாக்கம்-நுண்கலைமாணி இசை

மன்னார் மக்களின் கலைஞர்களின் திறமைகளையும் சாதனைகளையும் சோதனைகளையும் சுமந்துவரும் நியூமன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து----
ஆம் தங்களினதும் தாங்கள் பணிபுரியும் நியூமன்னார் இணையமானது பாரிய சேவைகளை செய்து வருகின்றது பாராட்டுக்குரியது மன்னாரில் உள்ளவர்களையே மன்னாரில் உள்ளமக்களுக்கு தெரிவதில்லை அப்படியிருக்கும் போது எங்களைப்போன்றவர்களை வெளியில் கொண்டுவருவது  உண்மையில் வரவேற்கதக்கது. மன்னாரில் வெந்து நொந்துபோயிருந்த எனக்கு தங்களின் வருகை மிகவும் சந்தோஷமானவிடையமே பாராட்டுக்கள்.

-சந்திப்பு-வை-கஜேந்திரன்-


























நியூ மன்னாரின் விம்பம் பகுதியில் ..கலாவித்தகர் இசைக்கலைமாமணி அ.ஜெனிபர் அருள்மொழி Reviewed by Author on July 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.