அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் சமூகப் பணி துறையில் முதன்முறையாக 7 பேருக்கு முதுகலைப் பட்டம்

 மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேரும் வகையில் சமூகப் பணி (Social Work) துறையில் முதன்முறையாக ஏழு பேர் தங்களது முதுகலைமானி (Master’s Degree) பட்டத்தை பெற்றுள்ளனர்.


கடந்த 27.11.2025 அன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (NISD) 15வது பட்டமளிப்பு விழாவில், NISD பணியாளர்கள் நாயகம் அவர்களால் இம்முதுகலைப் பட்டம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.


இந்த சாதனை, மன்னாரில் சமூக சேவைத் துறையின் முன்னேற்றத்திற்கும், சமூக நல மேம்பாட்டிற்கும் புதிய வழிவகுப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூகப் பிரச்சினைகளுக்கு தொழில்முறை அணுகுமுறையை உருவாக்கும் இந்நிபுணர்களின் பங்களிப்பு எதிர்காலத்தில் மாவட்ட வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.





மன்னார் மாவட்டத்தில் சமூகப் பணி துறையில் முதன்முறையாக 7 பேருக்கு முதுகலைப் பட்டம் Reviewed by Vijithan on December 05, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.