கோமாவுக்கு சென்ற கைதி; யாழ் சிறை நிர்வாகம் விளக்கம்
யாழ்ப்பாண சிறைச்சாலையில் ,தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதியை தாம் தாக்கவில்லை எனவும் , அவர் சிறைச்சாலையில் நிலத்தில் விழுந்து காயங்களுக்கு உள்ளானார் எனவும் யாழ் சிறைச்சாலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்க தவறிய புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனை , கடந்த 06ஆம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்து செய்து மறுநாள் 07ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 11 நாட்களுக்கு இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.
அண்ணாவிற்கு உண்மையில் என்ன நடந்தது?
அதனை அடுத்து யாழ்ப்பாண சிறைச்சாலையில் இளைஞன் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் , மறுநாள் 07ஆம் திகதி இரவு இளைஞனின் தலையில் காயங்களுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , ஒன்றரை நாள் சிகிச்சையின் பின்னர் , வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் ,இரண்டு நாட்களின் பின்னர் சுயநினைவற்ற நிலையில் மீண்டும் 11ஆம் திகதி யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 11ஆம் திகதி முதல் சுமார் 26 நாட்களுக்கு மேல் இளைஞனுக்கு நினைவு திரும்பாத நிலையில் (கோமா) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞனின் சகோதரி நேற்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது,
தனது அண்ணாவை கடந்த மாதம் 08 ஆம் திகதி வைத்தியசாலையில் பார்த்த போது . " அடிச்சு போட்டாங்க" என சொன்னார் , மேற்கொண்டு கேட்க சிறைச்சாலை உத்தியோகஸ்தர் விடவில்லை.
அதன் பின்னர் அண்ணா சுயநினைவு இல்லாத நிலையில் உள்ளார். அண்ணாவிற்கு உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பிலான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என கோரியிருந்தார்.
அந்நிலையிலையே விளக்கமறியல் கைதி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை. அவர் சிறைச்சாலையில் விழுந்தே காயங்களுக்கு உள்ளானர் என சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேவேளை , வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞனின் குடும்பத்தினர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் மனிதவுரிமை ஆணைக்குழுவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Reviewed by Vijithan
on
December 06, 2025
Rating:


No comments:
Post a Comment