கிழக்கு மாகாணத்தில் சுயாதீன ஊடகவியலாளர் மீது தாக்குதல் -
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் குமார நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.
ஊடகவியலாளரைத் தாக்கிய நபரை உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து, அந்த இடத்திலேயே அவரை மன்னிப்பு கோர வைத்தார்.
ஊடகவியலாளர்களைத் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் விடுத்தல் போன்றவை செய்யக்கூடாது என்று எச்சரித்தும் முறைப்பாட்டை பதிவு செய்து அனுப்பி வைத்தார்.
குறித்த நபரால் தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் சப்னி அஹமட் குறிப்பிடுகையில்,
எந்த குற்றமும் செய்யாத நிலையில் மற்றவர்களின் சேவைகளைப் பற்றி தன்னால் பதிவிடப்படும் கருத்துக்களில் வெறுப்படைந்ததன் காரணமாகவே தாக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
இன்றைய அரசியலில் சிறந்த இளைஞர்கள் ஈடுபட முன்வரவேண்டும். மீண்டும் மீண்டும் சண்டையிடும் அரசியல் கலாச்சாரத்தை ஒருபோதும் இளைஞர்கள் ஆதரிக்கக் கூடாது என குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் சுயாதீன ஊடகவியலாளர் மீது தாக்குதல் -
Reviewed by Author
on
November 11, 2017
Rating:
No comments:
Post a Comment