அண்மைய செய்திகள்

recent
-

புதினை சந்திக்கச் செல்கிறேன்: டொனால்டு டிரம்ப் -


பின்லாந்து நாட்டில் நாளை ரஷ்ய ஜனாதிபதி புதினுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பெரிய எதிர்ப்புகள் ஏதுமில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை இதுவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டின் தலைநகரான ஹெல்சின்கி நகரில், டிரம்ப்-புதின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின் முதற்கட்டமாக, முதலில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச உள்ளனர். பின்னர், தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, டிரம்ப் மற்றும் புதின் இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்து, கூட்டு பிரகடனம் ஒன்றை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரித்தானியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில்,
'நாளை பின்லாந்து நாட்டில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பெரிய எதிர்பார்ப்புகளுடன் நான் போகவில்லை. குறைந்த எதிர்பார்ப்புகளுடன் நாளை புதினை சந்திக்கச் செல்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.




புதினை சந்திக்கச் செல்கிறேன்: டொனால்டு டிரம்ப் - Reviewed by Author on July 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.