வெளிநாட்டில் சாதித்த 39 வயது தமிழன்! கோடிக்கணக்கில் பரிசை வென்றார் -
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஷி செல்லையா (39). கடந்த 2012-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தார் அடிலைடில் இருக்கும் சிறைச்சாலையில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மாஸ்டர் செப் 2018 என்ற போட்டியில் கலந்து கொண்டார்.
போட்டியின் முதல் சுற்றில் ஸ்டார்டர் வகை உணவாக சம்பல் இறால் எனும் உணவைச் சமைத்து, 30 புள்ளிகள் எடுத்தார்.
இவருடன் போட்டியிட்ட நபர் மொத்தமாக 77 புள்ளிகள் எடுத்திருந்தார்.
வெற்றி பெற்ற சஷிக்கு மாஸ்டர் செப் என்ற பட்டமும், ரொக்கப் பரிசாக ஒரு கோடியே 27 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.
இது குறித்து சஷு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தனக்கு உற்சாகம் அளித்துவரும் தனது குடும்பத்துக்கு நன்றி என பதிவேற்றம் செய்திருந்தார்.
வெளிநாட்டில் சாதித்த 39 வயது தமிழன்! கோடிக்கணக்கில் பரிசை வென்றார் -
Reviewed by Author
on
August 04, 2018
Rating:

No comments:
Post a Comment