Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மண்ணின் மைந்தன் M.Y.சஹிபுல் யமீன உலக சாதனைக்காக…படங்கள்மன்னார் மண்ணில் இருந்து ஜிம்னாஸ்ரிக் துறையில் உலக சாதனைக்;காக தன்னை தயார்படுத்திக்கொண்டு இருக்கும் மாணவனான இளம் ஜிம்னாஸ்ரிக் வீரன் M.Y.சஹிபுல் யமீன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தபோது….

தங்களைப்பற்றி…
வாப்பா முஹம்மது யாசீம் உம்மா Y.மஸ்குறா றாத்தா நாணா ஏழு சர்கேதர்களுடன் மன்னார் எருக்கலம்பிட்டி புதுக்குடியிருப்பு கிராமத்தில் மகிழ்ச்சியுடன் வசித்து வருகின்றேன்.

தங்களது கல்வி கற்றல்…
நான் தாராபுரம் மன்.அல்-மினா மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கலைப்பிரிவில் கல்வி கற்று வருகின்றேன்.

ஜிம்னாஸ்ரிக் துறையில் ஆர்வம்---
யூரியூப் மற்றும் இணையத்தில் இவ்வாறான நிகழ்ச்சிகளை பார்த்து பார்த்து நான் பத்து வயதில் இருந்து மெல்ல மெல்ல செய்து பழக ஆரம்பித்தேன் எனது அன்றாட செயற்பாடுகளில் செய்துகொண்டு வந்தேன் நண்பர்களுக்கும் செய்துகாட்டுவேன் அவர்களும் பாராட்டுவார்கள் உற்சாகமாக இருக்கும் மேலும் செய்ய ஆவலாக இருக்கும்.

ஜிம்னாஸ்ரிக் துறை தவிர்ந்து ஏனைய துறைகளில்…
பாடசாலை மெய்வல்லுநர் போட்டிகள் வலைப்பந்தட்டம் விளையாட்டுக்களிலும் அத்துடன் பாடல் போட்டிகளில் கலந்து கொண்டு வடமாகணத்தில் முதலிடத்தினையும் தேசிய ரீதியில் 2ம் இடத்தினையும் பெற்றுள்ளேன் முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொள்வது ஜிம்னாஸ்ரிக் துறையில் தான்.

தேசியப்போட்டிக்கு எவ்வாறு தெரிவு செய்யப்பட்டீர்கள்---
மன்னாரில் இளைஞர்சேவைகள் மன்றத்தின் ஊடாக
நடைபெற்ற 3G-Youth With Talent போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 10 இளைஞர்கள் வீதம் 24 மாவட்டங்களில் 240 இளைஞர்களும் 25 கொழும்பில் இருந்து 20 இளைஞர்களும் எல்லாமாக 260 இளைஞர்கள் போட்டியாளராக தமது திறமைகளை வெளிக்காட்டினர் போட்டிகளில் 260 போட்டியாளர்கள் 100போட்டியாளர்களாகி 50போட்டியாளர்களாகி 28போட்டியாளர்களாகி 03 சுற்றுக்கள்  கடந்து 08போட்டியாளர்களாகி இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளேன் இறுதி சுற்றானது 06-04-2019  மஹரகம கொழும்பில் நடைபெறவுள்ளது. அதற்கு தயாராகவுள்ளேன்.

இறுதிச்சுற்றில்  கiயெட சழரனெ உங்களுடன் போட்யிடவுள்ள போட்டிகள் பற்றி---
  • நான்-ஜிம்னாஸ்ரிக்
  • சர்க்கஸ்-1
  • மெஜிக்-02
  • டான்ஸ்-01
  • பைக்ஸ்டேன்-01
  • சன்டோ-01
  • ஜக்லிக்-01 இவ்வாறான துறைகளில் போட்யிடுகின்றார்கள்.


உலக சாதனை முயற்சி பற்றி…
185CM  உயரமும் 54KG நிறையுடைய நான்
இறுதி சுற்றில் நீளம்-15இஞ்ச் அகலம் 16இஞ்ச்  உயரம் 20இஞ்ச் கண்ணாடிப்பெட்டியில் நுழைந்து சில நிமிடங்கள் இருந்துள்ளேன்.
 உலக சாதனையாக இருப்பது 6நிமிடங்களும் 02 வினாடிகளும் அறிந்தேன் என்னால் ஆறு நிமிடங்களுக்கு அதிகமாக இருக்க முடியும் என நம்புகின்றேன்  கொஞ்சம் புதுமையான வழியில் செய்ய அதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றேன்.
உலக சாதனை எனும் போது எல்லாம் சரியாக அமைய வேண்டும் அதற்கு ஏற்பாட்டுக்குழுவும் இறைவனும் துணையிருக்க வேண்டும் என்னால் சாதிக்க முடியும் என நம்புகின்றேன்.


தங்களிற்கு  பயிற்சி வழங்குபவர்கள் பற்றி---
எனது இத்துறைக்கு குரு என்று எவரும் இல்லை ஆனால் எனது பயிற்சிக்கு துணையாக எனது குடும்பமும் உறவினர்கள் சில நண்பர்கள் ஊக்கமும் அளிக்கின்றார்கள். அவர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நினைவில்…

மக்களின் ஆதரவு எப்படியுள்ளது…
ITN-தொலைக்காட்சியூடாக ஒளிபரப்பபட்டது பலர் பார்த்து பாராட்டி வாழ்த்து தெரிவிக்கின்றனர் ஆனாலும் இறுதிச்சுற்றுக்கு மக்களின் முடிவும் வெற்றியை தீர்மானிக்கின்றது அதனால் நியூமன்னார் இணையம் ஊடாகவும் நான் மக்களிடம் மன்னாரின் மைந்தனாக வடக்கு மாகாணத்தின் ஒருவனாக தங்களின் ஆதரவினை வேண்டி நிற்கின்றேன்.

நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழத்திப்பாராட்டுகின்றோம். வெற்றிச்சாதனை புரிய வாழ்த்துக்கள்….

சந்திப்பு-வை.கஜேந்திரன்-

மன்னார் மண்ணின் மைந்தன் M.Y.சஹிபுல் யமீன உலக சாதனைக்காக…படங்கள் Reviewed by Author on March 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.