அண்மைய செய்திகள்

recent
-

பகிர்ந்து வாழ்தலும், விடாமுயச்சியும் மாணவர்கள் மத்தியில் திகழ வேண்டும்-குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளார்.

கடவுள் தந்த ஆற்றல்கள் மாணவர்களாகிய உங்களிடம் இருந்தாலும் அமரர்
அவுதப்பர் அடிகளாரிடம் இருந்த நல்ல பண்புகளும் முயச்சியும் அவசியம்
நீங்கள் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என மன்னார் மறைமாவட்ட குரு
முதல்வர் அருட்பணி ஏஇவிக்ரர் குரூஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

-மன்னார் மறைமாவட்டத்தில் அருட்பணியாளராக இருந்து அமரத்துவம் அடைந்த அருட்பணி எஸ்.வி.அவுதப்பர் அடிகளாரின் நான்காவது நினைவு தினத்தை மன் பேசாலை புனித மரியாள் பாடசாலை சமூகம் நினைவு கூர்ந்தது.

நேற்று திங்கள் கிழமை (24.06.2019) இவ் பாடசாலையில் அதிபர்
எஸ்.இராஜேஸ்வரன் பச்சேக் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வுக்கு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏஇவிக்ரர் குரூஸ் அடிகளார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

அருட்பணி அவுதப்பர் அடிகளாரின் நினைவு தினத்தை பாடசாலை மாணவர்களாகிய நீங்கள் நினைவுகூறும் இவ்வேளையில் உங்களுடன் நானும் சேர்ந்து அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக வேண்டுவதில் மகிழ்வு கொள்ளுகின்றேன்.

உங்கள் பாடசாலையின் சூழல் அழகுபடுத்தியிருக்கும் தன்மையை நான் பார்த்து நீண்ட நேரம் ரசித்துக் கொண்டிருந்தேன்.

அருட்பணி அமரர் அவுதப்பர் அடிகளார் வெளியில் தோன்றும்டபோது உங்கள்
பாடசாலை சூழலைப்போல் மற்றையவர்களின் பார்வையில் தோன்றக்கூடியவராகவே காணப்படுவார்.

என்னை பொருத்தமட்டில் நான் அவருடன் சிறிய குருமடத்திலிருந்து பெரிய
குருமடம் வரை ஒருமைப்பாட்டில் திகழ்ந்தவன். நான் குரு முதல்வராக இருப்பதால் அவர் என்னை அடிக்கடி சந்திப்பதும் ஆலோசனை
பெறுபவராகவும் காணப்பட்டார். அவரிடம் நான் கண்ட அனுபவம் அதிகம். அவர் எனக்கு ஒரு மூத்தவராக இருந்தும் மிக்க மரியாதை வழங்குபராகவும் ஆலோசனை கேட்டு செயல்படுபவராகவும் காணப்பட்டார்.

அருட்பணி அவுதப்பர் அடிகளார் தன்னை மாத்திரமல்ல மற்றவர்கள் மட்டிலேயே அதிகம் கருசனைக் கொண்டவராக காணப்பட்டார். இதன் வெளிப்பாடே இன்று இவ் நிகழ்வை நீங்கள் நடாத்துகின்றீர்கள்.

இன்று நீங்கள் அவரின் ஞாபகமாக பிள்ளைகளுக்கு அன்பளிப்பு
வழங்குகின்றீர்கள். இந்த செயற்பாடு அமரர் அடிகளாரிடம் நாங்கள் நிறைய
கண்டுள்ளோம். யாராவது ஏழைகளை அவர் கண்டு விட்டால் அவர்களுக்கு நிறைய வாரி வழங்கியுள்ளார். அதுமட்டுமல்ல அவர் ஏழைகளை தேடிச் செல்லுகின்ற, இரக்கம் காட்டுகின்ற போன்ற குணம் அவரிம் நிறைய இருந்தது.

அவர் இந்த நல்ல பண்பை தனதாக்கி மட்டும் வைத்திருக்கவில்லை. மாறாக
மற்றவர்களுடன் உரையாடும்போது அதாவது நாம் இந்த உலகத்தில் இருக்கும்போது எதை சாதிக்க போகின்றோம்? மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பார். ஆகவே பிள்ளைகளே நீங்களும்   மற்றவர்களுடன் பகர்ந்து வாழும் இந்த நல்ல பண்பை ஆரம்பத்திலிருந்தே உங்களிடம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பகிர்தல் ஒரு நல்ல கிறிஸ்தவ பண்பு. நாம் சிறுவர்களாக இருந்தாலும் நாம்
பகிர்ந்து வாழலாம். புனித பிலிப்பு நேரியாரின் வாழ்க்கையில் அவர்
சொல்லுவார் 'மகிழ்ச்சியாக இருக்கின்ற இதயத்தை இலகுவாக மனம் மாற்றி
விடலாம். அவர்களை நல்வழிப்படுத்தி விடலாம';.

துக்கமாக இருப்பவர்களை இவ்வாறு செய்வது கடினமானது. இந்த செயல்பாட்டை நான் அமரர் அவுதப்பர் அடிகளாரிடம் கவனித்துள்ளேன்.

ஏனென்றால் அடிகளார் எம்பொழுதும் மகிழ்ச்சியாகவே காணப்படுவார். அவரிடம் சென்று திரும்புகிற்றவர்களை நாம் பார்த்தால் மகிழ்வுடனே திரும்புவதை காணலாம்.

இவ்வாறுதான் புனித பிலிப்பு நேரியாரிடம் பலர் மகிழ்ச்சிக்காக சென்று
வருவார்கள். அவ்வாறுதான் நாம் அமரர் அவுதப்பர் அடிகளாரிடமும் கண்டு
கொண்டோம்.

இவருடைய இந்த இழப்பு அவருடைய குடும்பத்துக்கு மட்டுமல்ல எமது
மறைமாவட்டத்துக்கும் பெரிய இழப்பாக இருந்தாலும் இறைவனின் சித்தம்
அதுவாகும். இவர் இங்கு பேசாலையில் பங்கு தந்தையாக இருந்தபொழுது பாடசாலைகளுக்கு நிறைய உதவிகள் புரிந்துள்ளார். அதனால்தான் அவரை நீங்கள் இன்று நினைவு
கூறுகின்றீர்கள்.

அவர் தனது வாழ்க்கையில் கொண்டிருந்த நல்ல பண்புகளை நீங்களும் பற்றிப்
பிடித்துக் கொள்ள வேண்டும். அவரில் இன்னொரு நல்ல குணம் இருந்தது. அவர் நிறைய முயற்ச்சி செய்வார். இந்த பண்பு மாணவர்களுக்கு மிக மிக அவசியமானது.

கடவுள் நமக்கு கொடுத்த ஆற்றல்கள் இருக்கின்றன. இத்துடன் எமக்கு
முயறச்;சியும் தேவை. ஆகவே மாணவர்களாகிய நீங்கள் படிக்கின்ற காலத்திலே முயற்ச்சி எடுத்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

பகிர்ந்து வாழ்தலும், விடாமுயச்சியும் மாணவர்கள் மத்தியில் திகழ வேண்டும்-குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளார். Reviewed by Author on June 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.