அண்மைய செய்திகள்

recent
-

மண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் மனு கையளிப்பு-(படம்)

மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு 146 பேர் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் நேற்று திங்கட்கிழமை மனு கையளித்துள்ளனர்.

இலங்கையில் 1983 இல் உள்நாட்டுப் போர் தொடங்கிய கால கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் சென்று கொண்டிருந்தனர்.

-நாட்டில் இடம் பெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு   2009 ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்த போதும் ராமேஸ்வரத்துக்கு அகதிகளின் வருகை தொடர்ந்து கொண்டே இருந்தது.

தமிழகத்தில் 119 அகதிகள் இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.
இதில், 33,000 ஆயிரத்திற்கும்   அதிகமானோர் காவல் நிலையங்களில் அகதிகளாகப் பதிவு செய்து விட்டு, வெளியிடங்களில் வசித்து வருகின்றனர்.

இலங்கையில் இடம் பெற்ற போர் நிறைவடைந்து  10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை அகதிகள் சட்விரோதமாக இலங்கைக்கு  செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஐ.நா சபையின் அகதிகள் அமைப்பின் அதிகாரிகள்  மண்டபம் அகதிகள் முகாமில் ஆய்வு செய்தனர்.

ராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தற்போது 526 குடும்பங்களில் மொத்தம் 1,598 பேர் வசித்து வருகின்றனர். இதில் 45 குடும்பத்தைச் சேர்ந்த 146 பேர் தற்போது இலங்கை செல்ல விருப்ப ஐ.நா சபை அதிகாரிகளிடம் விருப்ப மனு கையளித்துள்ளனர்.
மண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் மனு கையளிப்பு-(படம்) Reviewed by Author on September 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.