அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு கேரளா கஞ்சாவை இறக்குமதி செய்த நான்கு இந்தியர்களுக்கு300000 ரூபா அபராதம்.

கேரளா கஞ்சா என்ற போதைப் பொருள் தொடர்பாக மூன்று குற்றச்சாட்டுக்கள்
சுமத்தப்பட்ட நிலையில் நான்கு வருடங்களுக்கு மேலாக விளக்கமறியல்
சிறைவாசம் அனுபவித்த நான்கு இந்தியர்கள் தங்கள் குற்றங்களை ஏற்றுக்
கொண்டதைத் தொடர்ந்து தண்டனைகளுடன் விடுதலையானார்கள்.

ஒரு இந்திய படகில் வந்த நான்கு இந்தியர்கள் அதாவது சுப்பிரமணியம்
முருகன்ராஜ், தம்புராஜா முத்துகுமார், ராஐ உமையவேல், பாண்டி தம்புவேல்
என்ற நபர்கள்

 28 கிலோ 100 கிராம் கேரளா கஞ்சாவை இலங்கைக்கு இறக்குமதி செய்ததாகவும் போதைப் பொருளை தங்கள் உடமையில் வைத்திருந்ததாகவும் போதைப் பொருளை சட்டபூர்வமற்ற முறையில் வியாபாரம் செய்யும் நோக்குடன் செயல்பட்டதாகவும் என மூன்று குற்றச் சாட்டின் கீழ் இவர்களுக்கு எதிராக மன்னார் மேலதிக நீதிமன்றில் தலைமன்னார் பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 கடந்த 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் இலங்கை கடற்பரப்பு எல்லைக்குள் வைத்து தலைமன்னார் கடற்படையினரால்  கைது செய்யப்பட்ட இவ் இந்தியர்களை தலைமன்னார் பொலிசில் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்தே இவர்களுக்கு எதிராக மன்னார் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக வவுனியா சிறைச்சாலையில் விளக்க
மறியலில் சிறை வாசம் அனுபவித்துக் கொண்டிருந்த  இவர்களின் வழக்கு கடந்த வியாழக்கிழமை12/09/2019 மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா முன்னிலையில் விசாரனைக்கு எடுக்கப்பட்டது.

இவ் எதிரிகள் சார்பாக மன்னார் சிரேஷ்ட சட்டத்தரணி செபநேசன் லோகு மன்றில் ஆஐராகி முன்வைத்து வாதத்தைத் தொடர்ந்தும் இவர்கள் தங்கள் குற்றத்தை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்தும் இவ் நான்குகுற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் மூன்று குற்றங்களுக்கும்

 ஒவ்வொரு குற்றத்துக்கும் தலா 25 ஆயிரம் ரூபா வீதம் 75 ஆயிரம் ரூபாவும்
மொத்தம் மூன்று இலட்சம் தண்டம்  விதிக்கப்பட்டதுடன் ஒவ்வொரு
குற்றத்துக்கான தண்டப் பணத்தை செலுத்த தவறின் தலா மூன்று மாத சாதாரண தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா கட்டளை பிறப்பித்தார்.

இலங்கைக்கு கேரளா கஞ்சாவை இறக்குமதி செய்த நான்கு இந்தியர்களுக்கு300000 ரூபா அபராதம். Reviewed by Author on September 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.