தமிழ் மக்களின் கோரிக்கைகள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன என்பதை மீண்டும் வலியுறுத்துவதே எழுக தமிழ் நிகழ்வின் நோக்கம்
‘எழுக தமிழ் 2019’ என்ற இந்த மக்கள் எழுச்சிப் பேரணியின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஈழத்தமிழ் மக்கள் ஓர் அடிப்படையான செய்தியைச் சொல்கின்றனர். அதாவது யுத்தம் முடிவுக்கு வந்ததோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம் அல்ல. ஈழத்தமிழ் மக்களின் அடிப்படையான கோரிக்கைகள் யுத்தத்திற்குப் பின்னரான பிரச்சினைகள் அனைத்தும் இன்றுவரை உயிர்ப்போடுதான் இருக்கின்றன. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற மக்கள் அமைப்பாக மக்கள் சக்தியாக இக்கோரிக்கைகளை இன்று மீண்டும் நாம் வலியுறுத்துகின்றோம்.
அதற்குரிய ஓர் அரிய சந்தர்ப்பமாக இந்த ‘எழுக தமிழ 2019;’ மக்கள் எழுச்சிப் பேரணியை நாம் நோக்க வேண்டும் என மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.
கடந்த திங்கள் கிழமை (16.09.2019) யாழ்ப்பாணத்தில் நடந்த எழுக தமிழ் நிகழ்வின்போது நல்லூர் ஆலய முன்றலில் இருந்து புறப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் ஆரம்பத்தில் கிறிஸ்தவ சமயம் சார்பாக ஆசியுரை வழங்கும்போதே தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில் கூறியதாவது:
தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளான தமிழர் தாயகம்ää சுயநிர்ணய உரிமை போன்றவற்றை உள்ளடக்கி இனப்பிரச்சினைக்குரிய நிரந்தரத் தீர்வை வலியுறுத்தியும் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்காமல் காலம் கடத்தும் அரசின் கபடத்தனத்தை சர்வதேச உலகுக்கு தெரியப்படுத்தவும்ää தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட அரச ஆதரவு பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனே நிறுத்தக் கோரியும்ää வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும்,போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்து நீதியை நிலைநாட்டக் கோரியும், சர்வதேச சமூகத்தின் தலையீட்டை வலியுறுத்தியும் இன்று இந்த மக்கள் பேரணியை நாம் முன்னெடுக்கின்றோம்.
நமது பிரச்சினைகளை மக்களாகிய நாமே வெளிக்கொணர வேண்டும். நமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய அழுத்தங்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாமே மேற்கொள்ள வேண்டும். மக்களின் உண்மையானää உணர்வுபூர்வமான எழுச்சிக்கு நிச்சயமாக ஒருநாள் பலன் கிடைக்கும். அத்தகைய நம்பிக்கையோடு நாம் பயணம் செய்வோம். தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்குமான தீர்வை நோக்கி நாம் தொடர்ந்தும் முயற்சிப்போம் பயணிப்போம் என்றார்.
- அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்-
தமிழ் மக்களின் கோரிக்கைகள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன என்பதை மீண்டும் வலியுறுத்துவதே எழுக தமிழ் நிகழ்வின் நோக்கம்
Reviewed by Author
on
September 18, 2019
Rating:

No comments:
Post a Comment