அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாக நிகழ்வுகள் சிறுபான்மை மக்கள் நீதிகோரி எங்கு செல்வது சிரேஷ்ட சட்டத்தரணி உனைஸ் பாரூக்


முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாக நிகழ்வுகளை பார்க்கின்றபோது இந்த நாட்டில் சிறுபான்மையான மக்கள் அவர்களுக்கு நடக்கும் அநியாயங்களை கோரி எங்கு செல்வது என்ற கேள்வி எழுகின்றது.
அதுமட்டுமல்ல பெரும்பான்மையாக தமிழர் வாழுகின்ற பிரதேசத்தில் பௌத்த பிக்குகள் நீதிமன்றில் வழங்கும் தீர்ப்புக்களை கணக்கில் எடுக்காது
அடாவடித்தனமாக செயல்பட்டதுக்கு அங்கிருந்த பொலிசாரும் ஒத்துழைப்பாக இருந்துள்ளமை இலங்கையில் உண்மையில் சட்டமும் நீதியும் சட்டமும் ஒழுங்கும் எந்தளவு இருக்கின்றது என்பது தெளிவாகின்றது என மன்னார் மாவட்டத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியும் வன்னி தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உனைஸ் பாரூக் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில்

வட மாகாணத்தில் யுத்தம் நிலவியதுக்குப் பின்னர் யுத்தம் முடிவுக்கு
கொண்டு வரப்பட்டதுக்கு பிற்பாடு அரசியல் ஆதிக்கம், நிர்வாகத்துறை
அதிக்கம், படையினரின் அடாவடித்தனம் போன்றவற்றிலும் நீதித்துறையில் மக்கள் பாரிய நம்பிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையிலேயே முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் கடந்த திங்கள் கிழமை நடந்த நிகழ்வு நீதித்துறையில் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கள் கிழமை (23.09.2019) குறித்த ஆலய வளாகத்தில் அதனோடு
இருக்கின்ற பௌத்த விகாரபதியின் உடலை தகனம் செய்ததின் தொடர்பாக வழக்கு நீதிமன்றில் முன் வைக்கப்பட்டது. இதன்போது கோவில் நிர்வாக சார்பாகவும் பௌத்த பிக்குகள் சார்பாகவும் இரு தரப்பிலும் சட்டத்தரனிகள் ஆஐராகி தமது பக்க வாதங்களை நீதவான் முன்னிலையில் முன்வைத்தபோது இந்து மக்கள் சார்பாக முன் வைக்கையில்

இந்து சமய ஆலய வளாகத்தில் குறித்த பிக்குவின் உடலை தகனம் செய்வது இந்து ஆலயத்தின் புனிதத் தன்மையை பாதிக்கும் தன்மையாக இருப்பதனால் இதனை ஆலயத்தின் அப்பால் ஒரு இடத்தில் தகனம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

பிக்குகள் சார்பாக வாதிட்ட சட்டத்தரனிகள் ஆரம்பத்தில் அவர்கள் பக்கம்
சார்பான நியாயங்களை தெரிவித்தபோதும் பின் சமரச நிலையில் அதன் அருகிலுள்ள கடற்கரை பக்கமாக தகனம் செய்வது என ஒத்துக் கொண்டனர்.

இதற்கமைய கடற்கரை பக்கமாக தகனம் செய்வதற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டதோடு அந்த இடத்தை அடையாளப்படுத்தும் முகமாக இரு தரப்பு சார்பாகவும் தலா இரண்டு சட்டத்தரணிகளை அந்த இடத்துக்குச் செல்லுமாறு பணிக்கப்பட்டது.

இந்த நிலையிலேதான் கோவில் தரப்பில் ஆஐராகிய சட்டத்தரனிகள் இருவர் அந்த இடத்துக்குச் சென்றபோது அதற்கு  மாறாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கொண்ட குழுவினர் இறந்த பிக்குவின் உடலை சுமந்து கொண்டு எந்த இடத்தில் தகனம் செய்யக் கூடாது என கூறப்பட்டதோ அந்த இடத்தை நோக்கி வரும்போது கோவில் சார்பாக ஆஐராகியிருந்த சட்டத்தரனிகள் நீதமன்ற தீர்ப்பின் தொடர்பில் சொல்ல ஆற்பட்டபொழுது அவர்கள் தாக்கப்பட்டது மாத்திரமல்லாமல் அதனை தடுக்கச் சென்ற இளைஞர்களும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமல்ல நீதிமன்றில் விவாதம் தொடராக நடந்து கொண்டிருந்தபொழுது அங்கு பிரசன்னமாக இருந்த பொதுபலச் சேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரர் நீதமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது நாங்கள் நினைத்தப்படியே பூதவுடலை தகனம் செய்வோம் என நீதிமன்றத்தை அவமதித்து அவமதிக்கும் விதத்தில் ஏசிக் கொண்டு வெளியில் சென்று இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டார்.

எனவே இதை நோக்கும்போது நீதமன்ற அவமதிப்புக்கள் இரு வகையில்
இடம்பெற்றுள்ளன. ஒன்று நீதமன்றத்தின் கட்டளைக்கு புறம்பாக குறித்த
பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

அடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் ஏற்கனவே குற்றம்
செய்யப்பட்டு சிறையில் இருந்த நாட்டின் ஐனாதிபதியினால் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ள பொதுபலச் சேனாவின் செயலாளர் ஞானச்சார தேரர் நடந்து கொண்டமையும் பேசியதும்.

மூன்றாவதாக கௌரவ நீதிமன்றத்தினால் ஞாயிற்றுக் கிழமை வழங்கப்பட்ட தற்காலிக தீர்ப்பும் திங்கள் கிழமை வழங்கப்பட்ட இறுதியான தீர்ப்பும் இருக்கையில் அமுல்படுத்தாது அவர்களின் நிர்வாக செயல்பாட்டில் நீதிமன்றத்தின் தீர்ப்பை கவனத்தில் கொள்ளாது செயல்பட்டது.

மேலுமாக குறித்த தீர்ப்பு வழங்கப்படும்போது அந்த இடத்தில் முல்லைத்தீவு
பொலிஸ் உதவி பொலிஸ் அத்தியட்சகரும் குறித்த பிரதேசத்தின் பொலிஸ்
பொறுப்பதிகாரியும்  சமூகம் அளித்திருந்தும் குறித்த நீதிமன்ற கட்டளையை
அமல்படுத்துவதில் பாராமுகமாக இருந்திருக்கின்றார்கள்.

மேலும் நீதிமன்றின் தீர்ப்பின்படி குறித்த இடத்துக்கு விஐயம் செய்த
சட்டத்தரனிகள் தாக்கப்பட்டதோடு அப்பாவி இளைஞர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

எனவே இவ் நிகழ்வுகளை பார்க்கின்றபோது இந்த நாட்டில் சிறுபான்மையான மக்கள் அவர்களுக்கு நடக்கும் அநியாயங்களை கோரி எங்கு செல்வது என்ற கேள்வி எழுகின்றது.

அதுமட்டுமல்ல பெரும்பான்மையாக தமிழர் வாழுகின்ற பிரதேசத்தில் பௌத்த பிக்குகள் நீதிமன்றில் வழங்கும் தீர்ப்புக்களை கணக்கில் எடுக்காது
அடாவடித்தனமாக செயல்பட்டதுக்கு அங்கிருந்த பொலிசாரும் ஒத்துழைப்பாக இருந்துள்ளமை இலங்கையில் உண்மையில் சட்டமும் நீதியும் சட்டமும் ஒழுங்கும் எந்தளவு இருக்கின்றது என்பது தெளிவாகின்றது.

எதிர்காலத்தில் பெரும்பான்மை இனத்தை மாத்திரம் நாடி ஐனாதிபதி தேர்தலில் களம் இறங்குகின்ற வேட்பாளர் எண்ணுகின்ற பட்சத்தில் இலங்கையில் வாழுகின்ற சிறுபான்மையின் மக்களின் நிலை கேள்விக்கு உட்படுத்தும் நிலையானது
தேர்தலுக்கு முன்னதாகவே ஒரு சமிக்கையை சிறுபான்மை மக்களுக்கு குறித்த நிகழ்வு காட்டுகின்றது.

எனவே வடமாகாணம் முழுவதுமுள்ள சட்டத்தரனிகள் முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தை திங்கள் கிழமை அமைதியான முறையில் மேற்கொண்டனர்.

இதன் பின்னர் சட்டத்தரனிகள் சில தீர்மானங்களை எடுத்தனர். இதில் குறிப்பாக நீதமன்றத்தை அவமதித்த தொடர்பில் இரு வகைகளான வழக்குகளை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாகவும்

இதில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்பட்டமைக்காக
நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததன் தொடர்பான ஒரு வழக்கையும்
அத்துடன் நீதிமன்ற செயல்பாட்டுக்கு எதிராக நீதமன்றத்தை அவமதிக்கும்
விதத்தில் பொதுபல சேன பொதுச் செயலாளர் ஞானதார தேரரின் செயல்பாட்டுக்கு எதிராக மேல்மன்ற நீதிமன்றில் நீதமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வதாகவும் இத்துடன் பொலிசாரின் அசமந்த போக்கு பொலிசாரின் குறித்த நடவடிக்கை தொடர்பில் அவர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட துறைக்கு முறைப்பாடு செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும்

மேலும் சட்டத்தரனி தாக்கப்பட்டமை தொடர்பாகவும் அப்பாவி இளைஞர்கள்
தாக்கப்பட்டமை தொடர்பாகவும் சம்பந்தப்படவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது விடயமாக சட்டத்தரனிகள் தாய் சங்கத்துக்கு முழுமையான அறிக்கையை அனுப்பி வைப்பதுடன் குறித்த விடயத்தை உயர் நீதிமன்ற பிரதம நீதியரசருக்கும் தெரியப்படுத்துவது எனவும்

குறித்த இந்த நடவடிக்கைகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை முதல் கட்டமாக
வெள்ளிக் கிழமை வரை வட மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணி களும் பணியை பகிஷ்கரித்து நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்றும் இதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்பட வேண்டும் பாதிக்கப்பட்ட
மக்கள் நீதித்துறையிலாவது நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்வுகளுக்கு பின்பு வட புலத்தில் வசிக்கின்ற மக்களின்
எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாக நிகழ்வுகள் சிறுபான்மை மக்கள் நீதிகோரி எங்கு செல்வது சிரேஷ்ட சட்டத்தரணி உனைஸ் பாரூக் Reviewed by Author on September 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.