அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை தமிழ் மக்களின் வாழ்வியலை நூல்கள் வடிவமாக அமைத்து வருகின்றேன். பேராசிரியர் அ.இராமசாமி.

பல்கலைக்கழகத்தில் நாடகப் பட்டறைகளை மேற்கொள்ளும் நிலைகளை தாண்டி தமிழ் மக்களின் நிலைமைகள் தற்பொழுது எவ்வாறு அமைந்து வருகின்றது என்பதை ஆய்வு செய்யும் பணியிலும் ஈடுபட்டு அவைகளை நூல் வடிவங்களாக ஆக்குவதற்கான முயற்சிகளில் கடந்து பத்து வருடங்களாக ஈடுபட்டு வருகின்றேன் என இந்திய தமிழ்நாடு நாடகத்துறை மற்றும் தமிழ் பேராசிரியர் அ.இராமசாமி இவ்வாறுதெரிவித்தார்.

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அருட்பணி தமிழ் நேசன் அடிகளார்
தலைமையில் மன்னார் கலையருவி மண்டபத்தில் வியாழக்கிழமை (02.01.2020) பிற்பகல் 3.30 மணி தொடக்கம் மாலை 7.30 மணிவரை நாடகப்
பயிற்சிப் பட்டறையும் சிறப்புரையும நடைபெற்றது.

இவ் நாடகப் பயிற்சி பட்டறையின் வளவாளராக இந்திய தமிழ் நாட்டில் மிகவும்தேர்ச்சிப் பெற்ற நாடகத்துறை மற்றும் தமிழ் பேராசிரியர் அ.இராமசாமி கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றுகையில்

நான் இலங்கைக்கு வருகை தந்திருப்பது இது இரண்டாவது முறையாகும்.
மூன்றாண்டுகளுக்கு முன் நான் மட்டக்களப்புக்கு வருகை தந்து அங்குள்ள
விபுலானந்தர் அழகியல் மாணவர்களுக்கான ஐந்து நாட்கள் கொண்ட நாடகப் பயிற்சி பாசறை ஒன்றை நடாத்திச் சென்றேன்.

நான் மாணவனாக இருந்த காலத்தில் இலங்கையைப்பற்றி நான் வாசித்த, கேட்டவிடயங்களிலிருந்து இலங்கைக்கு வந்து செல்ல வேண்டும் என்ற ஒரு அவா காணப்பட்டது.அதற்கமைவாகவே மட்டக்களப்புக்கு வந்து செல்லும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

அத்துடன் இலங்கையிலுள்ள தமிழர்களில் காணப்பட்ட வீரம் இவர்களின் விம்பம் என் மாணவ பருவத்திலே காணப்பட்டதால் இலங்iயை நோக்கிச் செல்ல வேண்டும்என்பதும் ஒரு தூண்டுகோளாக இருந்தது.

அத்துடன் இடம்பெயர்ந்து வந்த மக்கள் மற்றும் கல்விமான்கள் இவர்கள்
எல்லோரும் எனக்கு சொல்லிச் சென்ற இலங்கை தமிழர்கள் விடயம் மற்றும்
எழுதப்பட்ட நூல்கள் வாயிலாக நான் படித்து அறிந்ததைக் கொண்டு இந் நாட்டை நான் ஒரு முறையாவது சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஒரு புத்துணர்வு எனது மனதில் தோன்றியது.

மேலும் நான் ஒரு நாடகத்துறை மாணவனாக இருந்தமையால் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தந்த கலைஞர்களுடன் எனக்கு தொடர்புகள் இருந்தன.

1987 ஆம் ஆண்டு நானும் இலங்கையைச் சேர்ந்த நாடக களைஞர் ஒருவரும்
தஞ்சாவூரில் நடைபெற்ற நாடக பயிற்சி பாசறையில் கலந்து கொண்டபோது இருவரும் ஒரு மாதம் ஒரு அறையில் தங்கியிருந்த நண்பர்களாக இருந்தோம். முன்பு நான் இலங்கையைப்பற்றி பெரும்பாலும் நூல்களிலிருந்து அறிந்துவந்தாலும் இந்த நண்பர் என்னுடன் இணைந்தபின்பு நாளாந்தம் அவரிடமிருந்து இலங்கை தமிழர்கள் இவர்களின் போராட்டங்கள் பற்றிய கூடிய விபரங்களை அறியக்கூடியதாக இருந்தது.

அப்பொழுது நாங்கள் இருவரும் பிரியும் நேரம் வந்ததும் அந்த நண்பர் எனக்கு
கூறியது ஒரு வருடத்தால் தமிழர் பிரச்சனை தீர்ந்து விடும்.

அதன்பின் நீங்கள் இலங்கைக்கு வருகின்றீர்கள். என்னுடன் ஆறு மாதங்கள்
தங்கியிருக்கின்றீர்கள். இலங்கையில் சகல இடங்களிலுள்ள
நாடகத்துறையிலுள்ளவர்களை சந்திக்கின்றோம். தமிழர் கலாச்சாரத்தில்
நாடகத்துறையில் வடமொழி. தென்மொழி கூத்துக்கள், இஸ்லாமிய
கலாச்சாரத்துக்குரிய கலைகள் இருக்கின்றன. இவ்வாறு கத்தோலிக்கர்களின்
சமயம் சார்ந்த கலைகள் நாட்டுக்கூத்துக்கள் இருக்கின்றன என்றார்.

ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு பிற்பாடே நான் கண்ட கனவு நனவாகியுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் நான் இலங்கை சம்பந்தமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் மூலமாகவும் தொடர்ந்து வெளிவரும் நூல்களை நாளாந்தம் வாசித்து இங்குள்ள தமிழர்களைப்பற்றி அறிந்து வருகின்றேன்.

கடந்த பத்து ஆண்டுகளாக நான் அறிந்தவற்றை கேட்டவைகளை எழுதிக் கொண்டு இருக்கின்றேன். ஆனால் நான் இவ்வாறு எழுதுவது முழுமையாக சரியாகுமா என்ற கேள்வியும் என் மனதில் உதித்தது.

ஆகவே நான் மீண்டும் இலங்கை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற அவா மீண்டும் எனக்கு எழுந்தது. ஒரு காலத்தில் போராட்டம் தொடர்பான எழுத்துக்களும், போராட்ட உணர்வுகளை தூண்டக்கூடிய பாடல்களும் கவிதைகளும் வெளிவந்தன.

பின் போராட்டங்கள் நிறைவுற்றதும் நாட்டைவிட்டு வெளியேறியவர்கள்
சம்பந்தமான கதைகள், உக்கிரமான போராட்டம் சம்பந்தமான பதிவுகள் காணப்பட்டு வருகின்றன.பல்கலைக்கழகத்தில் நாடகப் பட்டறைகளை மேற்கொள்ளும் நிலைகளை தாண்டி தமிழ்
மக்களின் நிலைமைகள் தற்பொழுது எவ்வாறு அமைந்து வருகின்றது என்பதை ஆய்வு  செய்யும் பணியிலும் ஈடுபட்டு அவைகளை நூல் வடிவங்களாக ஆக்குவதற்கான முயற்சிகளில் கடந்து பத்து வருடங்களாக ஈடுபட்டு வருகின்றேன்.

அத்துடன் இங்கு கலை கலாச்சாரத்தை பேணி பாதுகாக்கப்பட வேண்டியது
ஒன்றாகும். நாடகப் பயிற்சியானது நீண்ட நாட்கள் கொண்ட பயிச்சியாகும்.
ஆதற்கான தயாரிப்பாகவே இருக்கும்.

இலங்கை தமிழ் மக்களின் வாழ்வியலை நூல்கள் வடிவமாக அமைத்து வருகின்றேன். பேராசிரியர் அ.இராமசாமி. Reviewed by Author on January 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.