அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபையின் விளையாட்டு மைதான சிற்றுண்டி சாலையும்- வீணடிக்கப்பட்டிருக்கும் மன்னார் மக்களின் வரிப்பணமும்

 மன்னார் நகர சபைக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள சிற்றுண்டி சாலை தொடர்பில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. விளையாட்டு மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுபடும் விளையாட்டு வீரர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்களின் நலன் கருதி இந்த சிற்றுண்டி சாலை முன்னர் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தற்போது அந்த சிற்றுண்டி சாலை குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது நகர சபையின் குத்தகைக்கு வழங்குதல் விதிகளின்படி குத்தகைக்கு எடுத்த நபரே இந்த சிற்றுண்டி சாலையை  நடத்த வேண்டும் ஆனால் இப்பொழுது நகர சபையின் குத்தகைக்கு தொடர்பில்லாத மூன்றாவது நபரான நகர சபையின் உறுப்பினர் ஒருவராலேயே இந்த சிற்றுண்டி சாலை நடத்தப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது குறித்த நகர சபை உறுப்பினர். இதன் விரிவாக்கத்திற்காக மைதானத்தின் சுற்றுமதிலின் சில பகுதிகள் உடைக்கப்பட்டு, குறித்த சிற்றுண்டி சாலை உரிமையாளருக்கு ஏற்றவாறு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, முன்னதாக அமைக்கப்பட்டிருந்த சுற்றுமதிலை உடைத்தமை மூலம் மன்னார் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். முன்னர் இருந்த நிலையிலேயே சிற்றுண்டி சாலையை தொடர அனுமதித்திருக்க வேண்டிய நிலையில், ஒரு தனிநபரின் சுயலாபத்திற்காக பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.


மேலும், உடைக்கப்பட்ட சுற்றுமதில் தற்போது மீண்டும் கட்டப்பட்டுள்ள நிலையில், இதற்காக நகர சபையின் நிதி மீண்டும் செலவிடப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலம் நகர சபையின் பணம் தேவையற்ற வகையில் வீணடிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


இந்த சம்பவம் தொடர்பில் மன்னார் நகர சபையின் செயல்பாடுகள் மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக நடைபெறுவதாக தெரிகிறது எனவும், இதற்கு நகர சபையின் தலைவர் உடனடியாக கவனம் செலுத்தி உரிய விளக்கம் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.







மன்னார் நகர சபையின் விளையாட்டு மைதான சிற்றுண்டி சாலையும்- வீணடிக்கப்பட்டிருக்கும் மன்னார் மக்களின் வரிப்பணமும் Reviewed by Vijithan on January 10, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.