அண்மைய செய்திகள்

recent
-

மகாவலி 'எல்' வலயப் பகுதியில் மக்கள் காணி உறுதிப்பத்திரம் பெற ஆவண செய்ய வேண்டும். சாள்ஸ் நிர்மலநாதன்MP

மகாவலி 'எல்' வலயப் பகுதியில் தென் பகுதி மக்களுக்கு காணிகளை வழங்கி
அவர்களை குடியேற்றியிருக்கும் பகுதிகளை விடுத்து அங்கு மிகுதியாக
காணப்படும் வெற்று காணிகளை அப்பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ்
மக்களுக்கு வழங்குவதற்காக, வெளியிடப்பட்ட வர்த்தகமானியை மீள் பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அக் காணிகளை வழங்கி மக்கள் உறுதிப்பத்திரங்கள் பெற ஆவண செய்யப்பட வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதிக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும் மகஜர்கள் அனுப்பி வைத்துள்ளார்.

இது விடயமாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள
கடிதத்தில்  1984 ம் ஆண்டுக்கு பிற்பாடு மணலாறு பிரதேசத்தில் பூர்வீகமாக
வாழ்ந்த தமிழ் மக்களை வலு கட்டாயமாக வெளியேற்றியபின் 1988ஃ2007 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்டிருந்த விஷேட வர்த்தமானி அறிவிறுத்தல்களின் மூலம் தமிழ்; விவசாய மக்களின் விவசாய இடங்கள் மகாவலி 'எல்' பிரிவாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால்  முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று மற்றும் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரிவு தமிழ் விவசாய மக்கள் மிகவும்
பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இப் பகுதியில் தென் பகுதி மக்களை குடியேற்றிய பின் தமிழ் கிரமங்களினது
பெயர்களும் குளங்களின் பெயர்களும் சிங்களப் பெயர் மாற்றங்களுக்கும்
உள்ளாகியுள்ளன.

இந்த நிலையில் அப்பகுதியில் விவசாயம் செய்கின்ற தமிழ் மக்கள் அங்கு
குடியேறி தங்கள் விவசாய செய்கையை செய்ய முடியாத சூழ் நிலைகளும்
காணப்பட்டு வருகின்றது.

ஆகவே தென் பகுதி மக்களை குடியேற்றிய பகுதிகளை தவிர்ந்து மகாவலி வலய பகுதியிலுள்ள மிகுதி காணிகளை வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீள் பரிசீலனை செய்து கரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கும் வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்கும் ஒப்படைத்து அவர்கள் மூலம் இவ் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை இவ் மக்கள் பெற அவண செய்ய வேண்டும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மகாவலி 'எல்' வலயப் பகுதியில் மக்கள் காணி உறுதிப்பத்திரம் பெற ஆவண செய்ய வேண்டும். சாள்ஸ் நிர்மலநாதன்MP Reviewed by Author on February 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.