அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்நாட்டைச் சேர்ந்த முதிய பெண்ணொருவரை அடிமையாக வைத்திருந்த தம்பதியினருக்கு அவுஸ்திரேலியாவில் எட்டு வருட சிறை

இந்தியப் பெண்ணை அடிமையாக வைத்திருந்த மைக்காக மெல்பேர்னைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நீதிமன்றம் எட்டு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. குமுதினி கண்ணணிற்கும் அவரது கணவர் கந்தசாமிக் கும் விக்டோரியாவின் உச்சநீதிமன்றம் உள்ள அவர்களதுஇல்லத்தில் பெண் ஒருவரை அடிமையாக வைத்திருந்தமைக்காக எட்டு வருட சிறைத் தண்ட னையை விதித்துள்ளது. குமுதினி கண்ணணிற்கு எட்டு வருட சிறைத்தண்டனையை விதித்துள்ள நீதிமன்றம் கணவரிற்கு ஆறு வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில் அடிமை ஒருவரின் உரிமையை வேண்டுமென்றே தங்கள் வசம் வைத்திருந்தனர் பயன்படுத்தினார்கள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 2015 இல் இந்தியாவைச் சேர்ந்த முதிய பெண்மணியொருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டவேளை உதவி மருத்துவர்களை குமுதினி அழைத்தவேளையே அவர்களின் நடவடிக்கை அம்பலத்திற்கு வந்தது. ஆனால் அவர் தனது பிள்ளைகளை இசைநிகழ்விற்கு அழைத்துச் சென்ற பின்னரே மருத்துவர்களை அழைத்துள்ளார். உதவி மருத்துவர்கள் அந்த பெண்ணை பார்த்தவேளை அவர் 40 கிலோவிற்கும் குறைவான உடல் எடையுடனும்,கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையிலும் காணப்பட்டார். 

அவரின் பற்கள் முற்றாக சேதமடைந்த நிலையில் காணப்பட்டன அவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்தப் பெண்ணின் உண்மையான நிலைமையை மறைப்பதற்காக நீங்கள் முயற்சி செய்தீர்கள் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை உங்கள் வீட்டுடன் மட்டுப்படுத்தினீர்கள் என நீதிபதி ஜோன் சம்பியன் குற்றம்சாட்டியுள்ளார் - உங்கள் அசிங்கமான உண்மையை மறைக்க இதனை செய்தீர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அந்தத் தம்பதியினர் அந்த பெண்ணின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்தினார்கள் என நீதிபதி அவர்களை சாடியுள்ளார். நீங்கள் பலவீனமான நிலையில் உள்ள பெண்ணை மோசமாக துஷ்பிரயோகம் செய்தீர்கள் அதற்காக நீங்கள் வெட்கப்படவேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட 67 வயது பெண்மணி இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் இருந்த பின்னர் முதியவர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளை தம்பதியினர் அவர் குறித்த விபரங்கள் வெளியாவதை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டதால் நோயாளி யார் என்பது தெரியாத நிலை காணப்பட்டுள்ளது. நீங்கள் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்புவதற்காக அதிகாரிகளை தவறாக வழிநடத்துவதற்காக திட்டமிடப்பட்ட பொய்களை தெரிவித்தீர்கள் என நீதிபதி சாடியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த முதிய பெண்மணி எங்கிருக்கின்றார் என அவரின் உறவினர்கள் கேட்டவேளை தமிழ்தம்பதியினர் உண்மையை தெரிவி;க்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி பொலிஸார் தொடர்பான உங்கள் நடவடிக்கையும் உங்களின் பதில்களும் உங்களின்இரக்கமற்ற இதயமற்ற நடவடிக்கைகளை புலப்படுத்தியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.



தமிழ்நாட்டைச் சேர்ந்த முதிய பெண்ணொருவரை அடிமையாக வைத்திருந்த தம்பதியினருக்கு அவுஸ்திரேலியாவில் எட்டு வருட சிறை Reviewed by Author on July 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.