அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அமுல் படுத்தப்பட்ட விலைக்கு மணல் விற்பனை செய்யப்படாது விட்டால் அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்படும்

மன்னார் மாவட்டத்தில் அமுல் படுத்தப்பட்ட விலைக்கு மண் விற்பனை செய்யப்படாது அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் அவர்களின் மண் அகழ்விற்கான அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்படும்.என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார். -மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (16) காலை மண் அகழ்வில் ஈடுபடுபவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாலினை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். 

 அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, மன்னார் மாவட்டத்தில் மண் அகழ்வு தொடர்பாக கடந்த காலங்களில் மக்களினால் முன் வைக்கப்பட்ட முறைப்படுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை சார் திணைக்களங்களுடன் இணைந்து கள விஜயத்தை மேற்கொண்டு சில இடங்களில் மண் அகழ்வு மேற்கொள்ளப்படுவதை தடுத்துள்ளோம். தற்போது மன்னார் மாவட்டத்தில் மண் விலை அதிகரித்துள்ளதாக மக்களிடம் இருந்து தொடர்ச்சியாக முறைப்பாடு கிடைக்கப்பெற்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் மண் அகழ்விற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுடன் இன்றைய தினம் திங்கட்கிழமை (16) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் மேற்கொண்டோம். 

 அதன் அடிப்படையிலும்,புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் அண்மையில் மேற்கொண்ட கள ஆய்வுக்கு அமைவாக அவர்களால் வழங்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையிலும் நாங்கள் தற்போது மன்னார் மாவட்டத்தில் 46 அனுமதிப்பத்திரத்தை வழங்கி உள்ளோம். இந்த அனுமதிப்பத்திரங்கள் இலுப்பைக்கடவை,கூராய், அருவியாறு, பெரியமடு, முசலி போன்ற இடங்களில் மண் அகழ்வு செய்ய வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் ஊடாக மக்களுக்கு குறைந்த விலையில்,மண் வழங்கப்பட வேண்டும் என்பதை அறியப்படுத்தி உள்ளோம். 

இவ்விடையம் தொடர்பாக கலந்துரையாடி உள்ளோம். இதன் அடிப்படையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இடங்களுக்கு 1 டிப்பர் மணல் மண் 29 ஆயிரம் ரூபாவிற்கும்,மன்னார் நகர பிரதேசச் செயலாளர் பிரிவில் 30 ஆயிரம் ரூபாவிற்கும்,தலைமன்னார் பிரதேசத்திற்கு 34 ஆயிரம் ரூபாவிற்கும், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 32 ஆயிரம் ரூபாவிற்கும் மண் விற்பனை செய்யப்பட வேண்டும் என தீர்மாணிக்கப்பட்டுள்ளது. 

 குறித்த தீர்மானத்தை உரிய முறையில் அமுல் படுத்த கிராம அலுவலகர்களுக்கு பிரதேசச் செயலாளர் களின் கையொப்பத்துடன் சிட்டை வழங்க உள்ளோதோடு மண் அகழ்வு செய்பவர்களின் விபரங்களையும் வழங்கவுள்ளோம். அமுல் படுத்தப்பட்ட விலையை உறுதி படுத்தி மண் வினியோகிக்க வேண்டும். அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படும் போது தீர்மானிக்கப்பட்ட விலைக்கு மண் வினியோகித்தார் களா? என்பது தொடர்பாக ஆராயப்பட்டு,அனுமதிப்பத்திரம் மீண்டும் வழங்கப்படுவது தொடர்பாக ஆராயப்படும். 

 மண் அதிக விலைக்கு விற்பனை செய்தால் அல்லது மண் கேட்ட போது வழங்கப்படாது விட்டால் உடனடியாக அவர்களின் விபரங்கள் எங்களுக்கு வழங்கப்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவர்களின் அனுமதிப்பத்திரமும் ரத்துச் செய்யப்படும்.மக்களின் அவசிய தேவைகளையும்,அபிவிருத்தி பணிகளையும் கருத்தில் கொண்டு குறித்த மண் அமுல்படுத்தப்பட்ட விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.
               









மன்னாரில் அமுல் படுத்தப்பட்ட விலைக்கு மணல் விற்பனை செய்யப்படாது விட்டால் அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்படும் Reviewed by Author on August 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.