மன்னாரில் எரிவாயு மற்றும் அடுப்பு வெடிப்பு -பெண் கூலி தொழிலாளியின் வீடு எரிந்து நாசம்.
குறித்த பெண் வீட்டில் தனிமையில் வசிப்பதுடன் பனம் பொருள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இன்றைய தினம் வியாழக்கிழமை (6) மதியம் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண் வசித்த முழு வீடும் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் அருகில் இருந்த கிராம மக்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.
எனினும் வீட்டில் இருந்த பெறுமதி வாய்ந்த பொருட்கள் சாம்பலாகி உள்ளது.
இந்த நிலையில் மன்னார் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , நகர சபை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்திற்கு என தனியான ஒரு தீயணைப்பு ஏற்பாடு இன்மையால் இவ்வாறான பல தீ விபத்துக்கள் பாரிய சேதங்களை ஏற்பட்ட பின்னரே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
மன்னாரில் எரிவாயு மற்றும் அடுப்பு வெடிப்பு -பெண் கூலி தொழிலாளியின் வீடு எரிந்து நாசம்.
Reviewed by Author
on
January 06, 2022
Rating:

No comments:
Post a Comment