அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் 'நாடு' இன நெல் உற்பத்தியாளர்களுக்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அவசர செய்தி.

மன்னார் மாவட்டத்தில் 'நாடு' இன நெல்லினை நிபந்தனையின் அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. நெல் அறுவடைக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் 2022/2023 பெரும்போக அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சி திட்டத்தின் அடிப்படையில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் 2023.02.09 ம் திகதி,சுற்று நிருபத்திற்கு அமைவாக, மாவட்ட செயலாளர் தலைமையில் சிறிய மற்றும் நடுத்தரளவு அரிசி ஆலை உரிமையாளர்கள் , கூட்டுறவு சங்கங்கள் மூலம் மன்னார் மாவட்டத்தில் 'நாடு' இன நெல்லினை மட்டும் பின்வரும் நிபந்தனை அடிப்படையில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 ஆகக் கூடிய ஈரப்பதன் 14% மற்றும் ஆகக் கூடிய நெற்பதரினளவு 9% உடைய நாடு நெல்ரூபா 100/- இற்கும்,ஈரப் பதன் 14% ற்கும் அதிகமான மற்றும் 22% அதற்கு குறைந்த நாடு நெல் ரூபா 88/- க்கும் கொள்வனவு செய்யப் படவுள்ளது. இத் திட்டத்தில் நெல்லை வழங்குவதற்கு தயாராகவுள்ள விவசாயிகள் இது பற்றிய தகவல்களை உடனடியாக கமநல அபிவிருத்தி திணைக்கள மாவட்ட காரியாலயத்திற்கு (023-2222162) திங்கள் தொடக்கம் வெள்ளி வரை, காலை 9.00 தொடக்கம் மாலை 4.மணி வரை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 




மன்னார் மாவட்டத்தில் 'நாடு' இன நெல் உற்பத்தியாளர்களுக்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அவசர செய்தி. Reviewed by Author on February 15, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.