மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு கிராமத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளதோடு நபர் ஒருவரையும் நேற்று திங்கட்கிழமை (3) இரவு கைது செய்துள்ளனர்.
மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை (3) மாலை விரைந்து செயல்பட்ட மன்னார் பொலிஸ் நிலை குற்றத்தடுப்பு பிரிவினர் தாழ்வுபாடு கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் சோதனையிட்டனர்.
இதன் போது குறித்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 9 கிலோ 400 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றியதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
August 04, 2026
Rating:


No comments:
Post a Comment