அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சுகந்திர தினத்திற்கு எதிரான கரிநாள் போராட்டம் முன்னெடுப்பு

இலங்கையின் 75 ஆவது சுகந்திர தின கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வருகின்ற நிலையில் இன்றையதினம் சனிக்கிழமை(04) மன்னார் மாவட்டத்தில் சுகந்திர தினத்திற்கு எதிரான கரிநாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ் சிவகரன் தலைமை சுகந்திர தின கொண்டாட்டம் இடம் பெற்ற மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது

 குறித்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள்,இளைஞர்கள்,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,தமிழ் உணர்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு நிறக்கொடிகளை ஏந்தியவாறு கைகளை சங்கிலியாள் கட்டி ,வாய் மற்றும் மூக்குகளை கறுப்பு துணிகளால் மூடிய படி பல்வேறு வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளுடன் சுகந்திர தினத்திற்கு எதிரான போரட்டத்தில் ஈடுபட்டனர் 

 குறிப்பாக 75 ஆண்டாகியும் எமது அடிப்படை உரிமை நசுக்கப்படுகின்றது,சிங்களத்தின் சுகந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்,பெளத்த தேசிய வாதமும் சிங்கள இனவாதமுமே எம்மை அடிமைப்படுத்துகின்றன என எழுதப்பட்ட பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தின் இறுதியில் கைகளில் பதாதைகளையும் கறுப்பு கொடிகளையும் ஏந்தியவாறு போராட்டகாரர்கள் மன்னார் பேரூந்து நிலைய வளாகம் முழுவதும் ஊர்வலமாக சென்றமை குறிப்பிடதக்கது

மன்னாரில் சுகந்திர தினத்திற்கு எதிரான கரிநாள் போராட்டம் முன்னெடுப்பு Reviewed by Author on February 04, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.