அண்மைய செய்திகள்

recent
-

உலக உணவுத் திட்டத்தின் கீழ் மல்வத்தை பிரதேசத்தில் நிவாரணம் வழங்கி வைப்பு : பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர்.

 உலக உணவுத் திட்டத்தின் கீழ் மல்வத்தை பிரதேசத்தில் நிவாரணம் வழங்கி வைப்பு : பிரதம அதிதியாக  அம்பாறை மாவட்ட செயலாளர்.உலக உணவுத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 1262 குடும்பங்களுக்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா தலைமையில் இன்று(19) மல்வத்தை பொது நூலகத்தில் நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.


சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மல்வத்தை, வளத்தாப்பிட்டி ஆகிய கிராமங்களுக்கான நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.


இவ் நிவாரணம் வழங்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்திக்க அபேயவிக்ரம அவர்கள் கலந்து கொண்டு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தார்.


மேலும் இந் நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல் எம் அஸ்லம், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.என்.எம் சசீர், எம்.ஆர்.எம் பெளசான், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


உலக உணவுத் திட்டமானது சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பொருளாதார நெருக்கடி காலகட்டத்திலும் சுமார் 7000 குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை தற்போது அம்பாறை மாவட்டத்தில் வழங்கப்படும் நிவாரண வேலைத்திட்டதில் மாவட்டத்தில் உள்ள 20 பிரதேச செயலகங்களில் 05 பிரதேச செயலகங்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டது அதில் சம்மாந்துறை பிரதேச செயலகமும் ஒன்றாகும். என்பது குறிப்பிடத்தக்கது.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் மல்வத்தை பிரதேசத்தில் நிவாரணம் வழங்கி வைப்பு : பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர். Reviewed by வன்னி on February 19, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.