எம்.பி இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் புதிய தகவல்
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தொடர்ந்தும் பொது அதிகாரியாக பதவி வகிப்பதாக நீதிமன்றில் அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.
அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றும் தகுதியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவின் விசாரணையின்போதே, மேலதிக மன்றாடியார் நாயகம் சுமதி தர்மவர்தன இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், மனுதாரர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், நாடாளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிப்பதற்கும் தகுதியற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வரும் வரை, குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தனது பணியில் செயல்படுவதைத் தடுக்கும் வகையில் முறையான அறிவிப்புக்களை வழங்குமாறு அவர் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில் குறித்த விசாரணையின் அமர்வு எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
June 27, 2025
Rating:


No comments:
Post a Comment